விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

தந்தூரி சிக்கன்

31 December, 2022, Sat 11:30   |  views: 4984

 தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். ஆனால் தந்தூரி சிக்கனை மிக எளிமையாக எப்படி வீட்டிலேயே செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.இந்த புத்தாண்டு அன்று இதை ட்ரை பண்ணி பாருங்க...

 
தேவையான பொருட்கள்
 
கோழி கறி – 4 (லெக் பீஸ்)
 
எண்ணெய் – தேவையான அளவு
 
கேசரி பவுடர் – அரை சிட்டிகை
 
மைதா மாவு – 50 கிராம் அளவு
 
கடலை மாவு – 50 கிராம் அளவு
 
தந்தூரி சிக்கன் மசாலா – 50 கிராம்
 
எலுமிச்சை பழம் – 1
 
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
 
உப்பு – தேவையான அளவு
 
முட்டை – 1 (வெள்ளை கரு மட்டும் போதும்)
 
மிளகுதூள் – 1 டீஸ்பூன்
 
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
 
தந்தூரி சிக்கன்
செய்முறை
 
கோழி கறியை நன்கு சுத்தம் செய்து அதில் கத்தியை வைத்து சிறிது கீறல் போடவும். அப்போதுதான் கறியில் மசாலா நன்கு சேரும்.
 
ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, தந்தூரி சிக்கன் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு, மிளகுதூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 
அத்துடன் எலுமிச்சை சாற்றை பிழிந்து சிறிது கேசரி பவுடரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த மசாலா கலவையில் சுத்தம் செய்த கோழி கறியை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானவுடன் 
கறியை அதில் போட்டு சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
 
கறியை அவ்வப்போது இருபக்கமும் திருப்பி திருப்பி போட வேண்டும். இதை செய்யும்போது குறைவான தீ இருப்பது மிகவும் முக்கியம். இல்லையேல் கறி கருகிவிட வாய்ப்பு உண்டு.
 
கறி நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பை அனைத்து கறியை எடுத்து விடவும். இப்போது சுவையான தந்தூரி சிக்கன் ரெடி.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

நாட்டு கோழி குருமா

6 February, 2023, Mon 4:06   |  views: 682

காலிப்ளவர் பகோடா

31 January, 2023, Tue 14:42   |  views: 1953

சேமியா இட்லி

24 January, 2023, Tue 14:11   |  views: 1708

ப்ரோக்கோலி பொரியல்

22 January, 2023, Sun 5:34   |  views: 2057

மசால் வடை

14 January, 2023, Sat 3:53   |  views: 3469
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18