எழுத்துரு விளம்பரம் - Text Pub

இன்னும் 2015ஆம் ஆண்டில் வாழும் மக்கள் - கிரெகொரியின் நாட்காட்டியின் மர்மம்

31 January, 2023, Tue 11:27   |  views: 5222

கிரெகொரியின் நாட்காட்டி என்பது உலக அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும். 
 
இந்த நாட்காட்டி மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டி பன்னாட்டுத் அஞ்சல் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது. 
 
இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கிமு 45-இல் உரோமைப் பேரரசர் யூலியசு சீசரால் உருவாக்கப்பட்ட யூலியன் நாட்காட்டியின் ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியசு இலிலியசு என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது 1582 பிப்ரவரி 24 இல் அப்போதைய திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று.
 
அந்தவகையில் இப்போது நீங்கள் உலகம் முழுவதும் 12 மாதங்களில் 1 வருடம் என்று நினைத்திருந்தால் அது தவறு. ஆம், ஒரு வருடம் என்பது 12 மாதங்கள் அல்ல, 13 மாதங்கள் என்று இந்த ஒரு நாடு இருக்கிறது. உலகெங்கிலும் 2023 ஆண்டு நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த நாட்டில் 2015 இன்னும் தொடர்வதற்கு இப்போது தான் தொடங்கியுள்ளது. இந்த நாடு எத்தியோப்பியா ஆகும். 13 மாதங்களுக்குப் பிறகு இங்கு புத்தாண்டு கொண்டாட்டம் நடைப்பெறும். இப்போது இதற்கான காரணத்தை தெரிந்துக்கொள்வோம்.
 
எத்தியோப்பியாவின் நாட்காட்டி உலகத்திலிருந்து வேறுபட்டது
உலக நாடுகள் கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்ட நிலையில், ஜூலியஸ் சீசர் உருவாக்கிய ஜூலியன் நாட்காட்டியை இந்த நாடு பின்பற்றுவதே இதற்குக் காரணம் ஆகும்.
 
உலகம் முழுவதற்கும் ஒரே மாதிரியான நாட்காட்டி பின்பற்று வருகிறது
கிரிகோரியன் நாட்காட்டி 1582 ஆம் ஆண்டு போப் கிரிகோரி 13 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஜூலியன் நாட்காட்டியை மேம்படுத்தி இந்த நாட்காட்டியை உருவாக்கி ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக அறிவித்தார். இந்த காலண்டர் உலகம் முழுவதும் பொருந்தும். ஆனால் எத்தியோப்பியா அதை ஏற்க மறுத்து பழைய ஜூலியன் நாட்காட்டியையே பின்பற்றி வருகின்றனர்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18