விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பாடகியை ரகசிய திருமணம் செய்து கொண்டாரா பிரேம்ஜி? பிரபல பாடகியின் பதிவால் பரபரப்பு!

23 January, 2023, Mon 12:53   |  views: 1677

 ’என் புருஷனோட நான் சேர்ந்து விட்டேன்’ என பிரபல பாடகி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனின் இரண்டாவது மகனான பிரேம்ஜி 43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் பிரபல பாடகி வினைதா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது. இது குறித்து இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்த புகைப்படங்கள் வைரல் ஆகின.
 
இந்த நிலையில் பாடகி வினைதா தனது இன்ஸ்டாகிராமில், பிரேம்ஜியை கட்டிப்பிடித்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’என் புருஷன் உடன் மீண்டும் சேர்ந்து விட்டேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து இருவருக்கும் ரகசிய திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இனிமேல் திருமணம் ஆகப்போகிறதா? என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
 
எது எப்படியோ பிரேம்ஜி திருமணமாகி வாழ்க்கையில் செட்டில் ஆனால் சரிதான் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை இருவரும் சேர்ந்து விரைவில் ரசிகர்களுக்கு விளக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18