விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

மசால் வடை

14 January, 2023, Sat 3:53   |  views: 2659

 பொங்கலுடன் நிச்சயம் எல்லோருக்கும் பிடித்த ஒரு சூப்பர் காம்பினேஷன் வடை. அதிலும் மசால் வடை இல்லாமல் படைக்க மாட்டார்கல். சிலருக்கு மசால் வடை சுட தெரிந்தாலும் மொறுமொறுவென சுடுவதில் சில ட்ரிக்ஸ் இருப்பது தெரிவதில்லை. அதனால் மசால் வடையை எப்படி லாவகமாக சுடலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.

 
தேவையான பொருட்கள் :
 
கடலை பருப்பு - 1 கப்
 
உப்பு - தே. அளவு
 
பட்டை - 1 இஞ்ச்
 
காய்ந்த மிளகாய் - 2
 
சீரகம் - 3/4 tsp
 
சோம்பு - 3/4 tsp
 
வெங்காயம் - 1
 
புதினா - ஒரு கைப்பிடி
 
கறிவேப்பிலை - 1 கொத்து
 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/4 டீஸ்பூன்
 
பச்சை மிளகாய் - 1
 
மஞ்சள் - 1 சிட்டிகை
 
எண்ணெய் - பொரிக்க
 
செய்முறை :
 
கடலைப் பருப்பை 1 .1/2 மணி நேரம் ஊற வைத்தால் போதும் அப்போதுதான் வடை மொறுமொறுவென வரும். ஊறியதும் தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள்.
 
பட்டை, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக ஊறவைத்த கடலை பருப்பு உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றுங்கள்.
 
மாவு மைய இல்லாமல் மொறப்பாக அரைக்கவும். ஒரு சில கடலைப் பருப்புகள் அப்படியே இருக்க வேண்டும்.
 
தற்போது அரைத்த மாவை அகல பாத்திரத்தில் போடவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா,இஞ்சி பூண்டு பேஸ்ட் என அனைத்தையும் போட்டு பிசையுங்கள்.
 
கொஞ்சம் வாயில் வைத்து உப்பு சரியாக உள்ளதா என பார்த்துக்கொள்ளவும். தற்போது கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வையுங்கள்.
 
அடுத்ததாக உள்ளங்கையில் தண்ணீர் நனைத்து சிறிதளவு மாவை எடுத்து உள்ளங்கையில் வட்டமாகத் தட்டி அப்படியே லாவகமாக எண்ணெய் கடாயில் போடவும்.
 
இப்படி ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மசால் வடை தயார்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

சேமியா இட்லி

24 January, 2023, Tue 14:11   |  views: 869

ப்ரோக்கோலி பொரியல்

22 January, 2023, Sun 5:34   |  views: 1208

அவல் பொங்கல்

11 January, 2023, Wed 13:27   |  views: 2681

கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல்

6 January, 2023, Fri 16:27   |  views: 3288

தந்தூரி சிக்கன்

31 December, 2022, Sat 11:30   |  views: 4269
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18