விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அவல் பொங்கல்

11 January, 2023, Wed 13:27   |  views: 2675

 பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. வழக்கம் போல் கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் செய்வீர்கள். சில பேருக்கு சலித்து போயிருக்கும் அதனால் வித்தியாசமாக ஏதேனும் பொங்கல் செய்ய விரும்புவீர்கள். நீங்கள் கண்டிப்பாக இந்த அவல் பொங்கலை செய்து பாருங்கள்.. நிச்சயம் விரும்பி சாப்பிடுவீர்கள்.

 
தேவையான பொருட்கள்:
 
அவல் - 1 1/2 கப்
 
பாசிப்பருப்பு - 1/2 கப்
 
உப்பு - தேவையான அளவு
 
எண்ணெய் - 1 டீஸ்பூன்
 
நெய் - 2 டீஸ்பூன்
 
மிளகு - 1 டீஸ்பூன்
 
சீரகம் - 1 டீஸ்பூன்
 
பச்சைமிளகாய் - 2
 
இஞ்சி - 1 துண்டு
 
முந்திரிப்பருப்பு - 2 டீஸ்பூன்
 
கறிவேப்பிலை - சிறிதளவு
 
கொத்துமல்லி - அலங்கரிக்க
 
செய்முறை:
 
பாசிப்பருப்பை உதிர் உதிராக வேக வைக்கவும் அல்லது இரண்டு விசில்கள் வருமாறு குக்கரில் வேக வைக்கவும்.
 
அடுப்பை ஏற்றி ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்த பொருட்களைப் போட்டு வறுக்கவும். வறுத்தவற்றுடன் அவல் சேர்த்து வதக்கவும்.
 
குக்கரில் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பினை அவல், தாளித்த பொருட்களுடன் சேர்த்து உப்பு, பெருங்காயம் சேர்த்து 3 டம்ளர் அளவு தண்ணீரைச் சேர்க்கவும். கிளறி விடவும்.
 
அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வேக விடவும். பொங்கல் தயாரானதும் நெய் சேர்த்துக் கலந்து கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.
 
குறிப்பு : இந்த அவல் பொங்கலில் விரும்பினால் பச்சை பட்டாணியை வேக வைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

சேமியா இட்லி

24 January, 2023, Tue 14:11   |  views: 863

ப்ரோக்கோலி பொரியல்

22 January, 2023, Sun 5:34   |  views: 1202

மசால் வடை

14 January, 2023, Sat 3:53   |  views: 2656

கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல்

6 January, 2023, Fri 16:27   |  views: 3282

தந்தூரி சிக்கன்

31 December, 2022, Sat 11:30   |  views: 4266
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18