விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல்

6 January, 2023, Fri 16:27   |  views: 3285

 இன்னும் சில நாட்களில் பொங்கல் திருநாள் வரப்போகிறது. பொதுவாகவே பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலும் வெண்பொங்கலும் செய்வது வழக்கம் தான். என்னதான் வீட்டில் பொங்கல் செய்தாலும் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலின் சுவைக்கு பல ரசிகர்கள் உண்டு.

 
அதனால் இந்த பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக இன்னும் சுவையான கோவில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலை வீட்டிலிருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள்.. ரசித்து சாப்பிடுவார்கள்! அப்படி கோவிலில் கொடுக்கப்படும் பொங்கலில் என்ன வித்தியாசமாக சேர்க்கிறார்கள்.. நாம் சேர்க்கும் எவற்றை சேர்ப்பதில்லை என்ற ரெசிபி கீழே.!
 
தேவையான பொருட்கள் :
 
பச்சரிசி - 1 கப்
 
வெல்லம் - 1/4 கிலோ
 
தேங்காய் - 4 முதல் 5 பத்தை
 
முந்திரி - தேவைக்கேற்ப
 
உலர்ந்த திராட்சை - தேவைக்கேற்ப
 
சுத்தமான பசு நெய் - 7 முதல் 8 டேபிள் ஸ்பூன்
 
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
 
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
 
செய்முறை :
 
முதலில் அரிசியை நன்றாக கழுவிய பின்னர் நிறைய தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக குழைந்து வெந்த பின்னர் சாதத்தை வடிக்காமல் சல்லடை பாத்திரத்தில் போட்டு வேகவைத்த தண்ணீரை இறுத்துக் கொள்ளுங்கள். 
 
அதன்பின் சாதத்தை அதே சட்டியில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து கரண்டியால் மசித்து விட வேண்டும்.
 
அதன்பின்னர் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி அதை குழைந்த சாதத்தில் சேர்த்து நன்றாக கலக்குங்கள். சாதமும் வெல்லமும் நன்றாக கலக்கும் வரை நன்றாக கிளறிக் கொள்ளுங்கள். நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இரக்கலாம்.
 
பொங்கலை தாளிக்க வேரு ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி உருகியதும் முந்திரி, உலர் திராட்சையை நெய்யில் நன்றாக வறுத்து பொந்நிறமானதும் அதை பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறுங்கள். அதன்பின் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறுங்கள்.
 
இறுதியாக கோவில் பிரசாதத்தில் மட்டும் சேர்க்கப் படும் பச்சை கற்பூரத்தை ஒரு சிட்டிகை மட்டும் சேர்த்து கிளறினால் கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல் தயார்.!

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

சேமியா இட்லி

24 January, 2023, Tue 14:11   |  views: 869

ப்ரோக்கோலி பொரியல்

22 January, 2023, Sun 5:34   |  views: 1208

மசால் வடை

14 January, 2023, Sat 3:53   |  views: 2659

அவல் பொங்கல்

11 January, 2023, Wed 13:27   |  views: 2681

தந்தூரி சிக்கன்

31 December, 2022, Sat 11:30   |  views: 4269
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18