விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பிரெட்

29 October, 2022, Sat 4:46   |  views: 3759

 பிரெட்டில் சுவையான சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். இன்று சில்லி பிரெட் செய்து உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அசத்துங்கள். 

 
தேவையான பொருட்கள்: 
 
பிரெட் ஸ்லைஸ் - 10, 
தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி, 
சிவப்பு கேசரி கலர் - சிறிதளவு, 
கொத்தமல்லி இலை - அரை கட்டு, 
எலுமிச்சை ஜுஸ் - சிறிதளவு, 
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி, 
வெங்காயம் - 2
தக்காளி - 2 
கீறிய பச்சை மிளகாய் - 3, 
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, 
நெய் - ஒரு தேக்கரண்டி, 
எண்ணெய் - தேவையான அளவு, 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை 
 
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்துக் கொள்ளவேண்டும்.
 
அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி வதங்கிய பின்னர் தக்காளி சாஸ், சிவப்பு கேசரி கலர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும். 
 
மசாலா பச்சை வாசனை போனவுடன் வறுத்து வைத்துள்ள பிரெட் துண்டுகள், உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும். பரிமாறும் முன் கொத்தமல்லி இலை, எலுமிச்சை ஜுஸ், சிறிது வெங்காயம் சேர்த்து பரிமாறவும். இப்போது சுவையான, காரமான குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பிரெட் தயார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

பன்னீர் மசாலா!

29 November, 2022, Tue 16:53   |  views: 576

சிக்கன் லாலிபாப்

26 November, 2022, Sat 6:32   |  views: 1081

ரவை பாயாசம்

21 November, 2022, Mon 15:42   |  views: 1522

பன்னீர் ஆம்லெட்

18 November, 2022, Fri 17:21   |  views: 1606

முட்டை போண்டா

15 November, 2022, Tue 15:51   |  views: 2088
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18