விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

3 ஆவது ஒருநாள் போட்டியில் வென்றது இலங்கை!

1 December, 2022, Thu 8:39   |  views: 1890

ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்களால் வென்றது.
 
பல்லேகலையில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 50 ஒவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்களைப் பெற்றது.
 
இப்ராஹிம் ஸத்ரான் 138 பந்துகளில் 162 ஓட்டங்களைக் குவித்தார். நஜிபுல்;லா ஸத்ரான் 76பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்றார்.  
 
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களைப் பெற்றது.
 
சரித் அசலங்க 72 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களைப் பெற்றார். குசல் மெண்டிஸ் 61 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பெற்றார். 
 
3 போட்டிகள் கொண்ட இத் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது. 2 ஆவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது 
 
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1:1 விகதத்தில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
 
3 ஆவது போட்டியின் ஆட்டநாயகனாக சரித் அசலங்கவும், சுற்றுப்போட்டியின் ஆட்ட நாயகனாக இப்ராஹிம் ஸத்ரானும் தெரிவாகினர்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18