விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பரபரப்புக்கு மத்தியில் சமநிலையில் முடிந்த சேர்பியா - கெமறூன் போட்டி

28 November, 2022, Mon 18:30   |  views: 1766

 உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டித்தொடரின் இன்றைய போட்டியில் சேர்பியாவுக்கும் கெமறூனுக்கும் இடையில் அல் ஜனூப் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

 
பரபரப்பாக நடைபெற்ற ஜீ குழுவுக்கான முதலாம் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டி 3 - 3 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. 
 
போட்டியின் 29ஆவது நிமிடத்தில் டோலோவின் கோர்னர் கிக்கைப் பயன்படுத்தி ஜியேன் சார்ள்ஸ் கெஸ்டெலெட்டோ பந்தை கோலினுள் புகுத்தி கெமறூனை முன்னிலையில் இட்டார்.
 
எவ்வாறாயினும் முதலாவது ஆட்ட நேரத்தின் உபாதையீடு நேரத்தில் 2 நிமிட இடைவெளியில் 2 கோல்களைப் போட்ட சேர்பியா இடைவேளையின்போது 2 - 1 என முன்னிலைப் பெற்றது.
 
உபாதையீடு நேரத்தின் 1ஆவது நிமிடத்தில் டெடிக்கின் ப்றீ கிக் பந்தை நோக்கி மிக உயரமாகத் தாவிய ஸ்ட்ராஹிஞ்சா பாவ்லோவிச், தலையால் முட்டி கோல் நிலையை சமப்படுத்தினார்.
 
2 நிமிடங்கள் கழித்து ஸிவ்கோவிச் பரிமாறிய பந்தை சேர்ஜெஜ் மிலின்கோவிச் சாவிச் கோலாக்கி சேர்பியாவை முன்னிலையில் இட்டார்.
 
53ஆவது நிமிடத்தில் சேர்பியா 3ஆவது கோலைப் போட்டது. டெடிக் பரிமாறிய பந்த அலெக்சாண்டர் மிட்ரோவிச் கோலாக்கி சேர்பியாவை 3 - 1 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலையில் இட்டார்.
 
 
கடுமையாக முயற்சித்த கெமறூன் அடுத்தடுத்த நிமிடங்களில் 2 கோல்களைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தி சேர்பியாவைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.
 
போட்டியின் 63ஆவது நிமிடத்தில் கெமறூன் வீரர் வின்சென்ட் அபூபக்கர் ஓங்கி உதைத்த பந்து சேர்பியா கோலின் மேல் பகுதிக்குள் புகுந்தது.
 
அடுத்த நிமிடமே அபூபக்கர் பரிமாறிய பந்தை எரிக் மெக்ஸிம சூப்போ மோட்டிங் கோலினுள் புகுத்த கோல் நிலை 3 - 3 என சமமானது.
 
இந்தப் போட்டி முடிவுடன் இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுள்ளன.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18