விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஒரு ஓவரில் ஏழு சிக்ஸர்கள் - புதிய சாதனை படைத்த ருதுராஜ்

28 November, 2022, Mon 12:14   |  views: 2233

2022ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரின் இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
 
இவர் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் – மகாராஷ்டிரா ஆகிய அணிகள் மோதின.
 
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற உத்தரப் பிரதேச அணித்தலைவர் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.
 
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 330 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 220 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்
 
இவர் போட்டியின் இறுதி ஓவரில் (50ஆவது ஓவர்) தொடர்ச்சியாக 4 பந்துகளுக்கு 4 சிக்ஸர்களை விளாசினார்.
 
இதனையடுத்து, ஐந்தாவது பந்திலும் ருதுராஜ் சிக்ஸர் ஒன்றை அடித்த போதிலும், அது செல்லுபடியற்ற பந்துவீச்சாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.
 
இந்தநிலையில், ஓவரின் இறுதி இரண்டு பந்துகளிலும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார் ருதுராஜ்.
 
இதன்படி, ஒரே ஓவரில் 7 ஆறு ஓட்டங்களை பெற்றதுடன், ஒரு ஓவரில் அணிக்காக 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.
 
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் ஏழு சிக்ஸர்கள் பெறப்பட்டமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18