விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

முதல்முறையாக வாலுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை!

27 November, 2022, Sun 8:12   |  views: 7490

மெக்ஸிகோவின் வடகிழக்கு பகுதியில் சமீபத்தில், வாலுடன் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மிகவும் மிருதுவாக தோல் உடன் இந்த வாலில், துளிர் முடிகள் இருந்தன. 5.7 செ.மீட்டர் நீளத்திற்கு இருந்த அந்த வால், 3 மீ.மீட்டரில் இருந்து 5 மீ.மீட்டர் வரையும், வாலின் கடைசிபகுதியை கூர்முனையாகவும் இருந்துள்ளது. 

 
அந்த குழந்தை நிறைமாதத்தில் பிறந்துள்ளது என்றும் கர்ப்பகாலத்தில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோருக்கு இது இரண்டு குழந்தை என்றும் முன்னதாக பிறந்த மகன் ஒருவன் ஆரோக்கியமாக இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
 
முதுகுதண்டு எலும்பு முடியும் இடத்தில் அந்த வால் இருந்துள்ளது. பின்னர், குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்கு பின் அறுவை சிகிச்சை மூலம், குழந்தைக்கு வலியில்லாமல் அந்த வாலை அகற்றி விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
மனித வால்களில், 'பொய் வால்' (Pseudo Tails) மற்றும் 'நிஜ வால்' (True Tails) என வகைமைகள் உள்ளன. இதில், பொய் வால் முதுகுதண்டு பிரச்சனையால் ஏற்படக்கூடியது. நிஜ வால், எலும்புகள் அற்று, சதை, ரத்த நாளங்களுடன் இருக்கும். ஆனால், மெக்ஸிகோவில் பிறந்த குழந்தைக்கு முதுகு தண்டில் பிரச்சனை இல்லை என்பது ஸ்கேன் மூலம் தெரிந்துள்லது. 
 
குழந்தைகளுக்கு 'நிஜ வால்கள்' 'மிகவும் அரிதானவை' என்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழு குறிப்பிட்டது, 2017ஆம் ஆண்டுவரை, இதுபோன்று 195 வழக்குகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், மிக நீளமானது என்பது 20 செ.மீட்டருக்கு வால் இருந்துள்ளது. அவை பெரும்பாலும் சிறுவர்களிடமே காணப்படுகின்றன. 
 
சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களாகிய நாம் குரங்குகளிடம் இருந்து மனிதர்களாக பரிணமித்தபோது, நமது மூதாதையர்கள் வாலை இழந்தனர். சில நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களில், மனித வால்கள் புனிதமாகக் கருதப்பட்டு வழிபடப்படுகின்றன.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18