விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

சூர்யா - 42 படத்துக்காக இலங்கை வரும் சூர்யா?

24 November, 2022, Thu 15:59   |  views: 2007

 தமிழக திரைப்பட நடிகர் சூர்யாவின் எதிர்பார்க்கப்படும் சூர்யா - 42 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இலங்கையிலும் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அத்துடன், கோவா - சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்புகளுக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
இதன் மத்தியிலேயே, இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இலங்கையின் வனப்பகுதிகளில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சூர்யா - 42 திரைப்படம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கதையை கொண்டிருக்கும் என சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இத்திரைப்படத்தின் கதாநாயகியாக பொலிவூட் நடிகை திரிஷா பதானி நடிக்கவுள்ளார்.
 
2023ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையவுள்ளன.
 
ஐரோப்பாவின் பல்கேரியா - செர்பியா போன்ற நாடுகளும், கம்போடியா - வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிஜி ஆகிய நாடுகளிலும் மூன்று நாடுகள் படப்பிடிப்புக்காக தெரிவு செய்யப்படவுள்ளன.
 
பாரிய நிதி செலவில் தயாரிக்கப்படும் இந்தப்படத்தில் சூர்யா 5 கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார்.
 
இரண்டு பாகங்களாக 10 மொழிகளில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது.
 
இதேவேளை, சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தின் சில படப்பிடிப்புகளும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18