விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலகக் கிண்ணம் காற்பந்து - ஜேர்மனுக்கு அதிர்ச்சி கொடுத்து ஜப்பான்

23 November, 2022, Wed 17:04   |  views: 2939

 உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் முன்னாள் சம்பியனான ஜேர்மனை ஜப்பான் 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. 

 
இன்றைய போட்டி கட்டாரின் தலைநகர் தோஹாவின் கலீபா அரங்கில் இப்போட்டி நடைபெற்றது.
 
போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீரர் இல்காய் குண்டகான் முதலாவது கோலை புகுத்தினார்.
 
இடைவேளையின் போது ஜேர்மனி 1:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது. எனினும், 76 ஆவது நிமிடத்தில் ஜப்பானிய வீரர் ரிட்ஸு டோவன் கோல் அடித்து, கோல் விகிதத்தை சமப்படுத்தினார்.

 
அதன்பின் 83 ஆவது நிமிடத்தில் டகுமா அசானோ, ஜப்பானின் இரண்டாவது கோலை புகுத்தி ஜேர்மனிக்கு அதிர்ச்சியளித்தார்.
 
உலகக் கிண்ண போட்டிகளில் பதிவான மற்றொரு அதிர்ச்சிகரமான பெறுபேறு இது. 
 
சர்வதேச கால்பந்தாட்டத் தரவரிசையில் ஜேர்மனி 11 ஆவது இடத்திலும் ஜப்பான் 24 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18