விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

சவூதியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆர்ஜென்டீனா

22 November, 2022, Tue 14:32   |  views: 2195

 கட்டாரில் நடைபெற்று வரும்  உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆர்ஜென்டீனாவை 2:1 கோல்களால்  சவூதி அரேபியா வெற்றி  பெற்றுள்ளது. 

 
குழு சி அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கத்தாரின் லூசெய்ல் நகரில் நடைபெற்றது. போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஆர்ஜென்டீன அணித்தலைவர் லயனல் மெஸி கோல் புகுத்தினார். 
 
48 ஆவது நிமிடத்தில் சவூதி அரேபிய வீரர் சலே அல்சேஹ்ரி கோல் புகுத்தி, கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.
 
53 ஆவது நிமிடத்தில் சவூதி அரேபியாவின் சலீம் அல்தாவ்சரி அடித்த கோல், சவூதி அரேபியாவை 2:1 கோல்கள்  விகிதத்தில் முன்னிலைக்கு கொண்டு வந்தது.
 

 
 
இறுதியில் சவூதி அரேபியா கோல் விகிதத்தில் ஆர்ஜென்டீனாவை வென்றது.
 
இரு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீனா  தொடர்ச்சியாக 36 போட்டிகளில் தோல்வியடையாமல் இந்த உலக கிண்ண  சுற்றுப்போட்டிக்குள் பிரவேசித்தது. 
 
சம்பியனாகக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படும் ஆர்ஜென்டீனா,  சவூதி அரேபியாவிடம் தோல்வியுற்றமை அதிர்ச்சிக்குரியதாகும்.
 
சர்வதேச கால்பந்தாட்டத் தரவரிசையில் ஆர்ஜென்டீனா 3 ஆவது இடத்திலும் சவூதி அரேபியா 51 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18