விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

இதுதான் எனக்கு இறுதி வாய்ப்பு - மெஸ்ஸி

22 November, 2022, Tue 11:09   |  views: 2003

கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அர்ஜென்ட்டினா (Argentina) இன்று (22 நவம்பர் 2022) அதன் முதல் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளது.
 
சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு C பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜென்ட்டினா, சவுதி அரேபியாவுடன் (Saudi Arabia) மோதவிருக்கிறது.
 
இந்த ஆட்டம் அர்ஜென்ட்டினா அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு மிக முக்கிய ஆட்டமாக அமைந்துள்ளது.
 
35 வயது மெஸ்ஸி ஐந்தாவது முறையாக அர்ஜென்ட்டினாவுக்காக உலகப் போட்டியில் பங்கேற்கிறார்.
 
ஏழு முறை Ballon d'Or விருதை வென்றுள்ள மெஸ்ஸி இதுவரை உலகக் கிண்ணத்தை வென்றதில்லை. ஆனால் ஆகக் கடைசியாக 2014ஆம் ஆண்டு அர்ஜென்ட்டினாவை இறுதியாட்டம் வரை கொண்டுசென்ற பெருமை அவருக்குண்டு.
 
கத்தார்தான் தாம் விளையாடப்போகும் கடைசி உலகக் கிண்ண ஆட்டம்; தமது கனவை அடைய இது கடைசி வாய்ப்பாக இருக்கும் என்றும் மெஸ்ஸி கூறியிருப்பதால் இம்முறை அவர் மீதான ரசிகர்களின் கவனம் அதிகரித்துள்ளது.
 
இன்றைய ஆட்டம் குறித்துப் பேசிய மெஸ்ஸி:
 
"உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்காக நான் தனிப்பட்ட முறையில் உடல்ரீதியாக எந்தவிதச் சிறப்பு ஆயத்தப் பயிற்சிகளையும் செய்யவில்லை. ஆனாலும் நான் மிகச் சிறந்த உடற்தகுதியைக் கொண்டிருப்பதாக உணர்கின்றேன்," என்றார்.
 
அர்ஜென்ட்டினா - சவுதி அரேபியா சந்திக்கும் ஆட்டம் காற்பந்து ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18