விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி: நேரலையில் பேட்டி எடுத்த நிருபரிடம் திருட்டு

22 November, 2022, Tue 8:53   |  views: 2129

கத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஒரு நிருபர் நேரலையில் ரசிகர்களைப் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தபோது  அவரது பணப்பையிலிருந்து கடன்பற்று அட்டைகளும் பணமும் ஆவணங்களும் களவாடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
 
பாதிக்கப்பட்ட அந்த நிருபர், அர்ஜென்ட்டினாவின் Todo Noticias தொலைக்காட்சி நிலையத்தின் டோமினிக் மெட்ஸ்கர் (Dominique Metzger). 
 
நடனமாடிக்கொண்டிருந்த ரசிகர்களைப் பேட்டி எடுத்தபோது பணப்பையை ஒருவர் திறப்பதைக் கவனித்ததாக மெட்ஸ்கர் கூறினார்.
 
இருப்பினும் திருடியதாக நம்பப்படும் நபர் கேமராவில் பதிவாகவில்லை.
 
அது குறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகக் கூறிய மெட்ஸ்கர் அதிகாரிகளிடம் பேசியபோது அதிர்ச்சி அடைந்ததாக அவர் சொன்னார்.
 
"திருடனுக்கு எந்த விதமான தண்டனையை விதிக்க விரும்புகிறீர்கள்? 5 ஆண்டுச் சிறை? அவர் நாடு கடத்தப்படவேண்டுமா?" என்று அதிகாரிகள் தம்மிடம் கேட்டதாக மெட்ஸ்கர் கூறினார்.
 
இருப்பினும் திருடியவரைக் கண்டுபிடித்துவிடுவோம் என்று காவல்துறையினர் அவரிடம் உறுதிகூறியுள்ளனர்.
 
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடப்பில் உள்ளன.
 
போட்டிகள் நடைபெறும் 8 விளையாட்டு அரங்குகளிலும் மொத்தம் 20,000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18