விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

92 ஆண்டுகளின் நடந்த சாதனை - கட்டாரை வீழ்த்திய ஈகுவடார்

21 November, 2022, Mon 1:42   |  views: 3423

 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் கத்தார் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணி வீழ்த்தியது.

 
முதல் போட்டியில், தொடரை நடத்தும் நாடான கத்தார் அணியை எதிர்த்து ஈகுவடார் அணி விளையாடியது.
 
ஈகுவடார் அணி தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
 
போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் அடிக்கப்பட்ட கோல், ஆஃப் சைட் என்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16வது நிமிடத்தில் ஈகுவடார் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி, ஈகுவடார் அணியின் அனுபவ வீரர் வெலன்சியா முதல் கோலை அடித்து அசத்தினார்.
 
 

 
31வது நிமிடத்தில் கெசைடோ அடித்த கிராஸை, வெலன்சியா ஹெட்டர் மூலம் கோலாக்கினார். இதனை தடுக்க கத்தார் அணி கோல் கீப்பருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் கத்தார் அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனையும் கத்தார் அணியின் அலி தவற விட்டார்.  இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கணக்கில் ஈகுவடார் அணி முன்னிலை பெற்றது.
 
இரண்டாம் பாதி ஆட்டம் தொடக்கம் முதலே ஈகுவடார் அணி கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாடியது. இருந்தும் கத்தார் அணியின் கோல்கீப்பரின் திறமையால் இரு கோல்கள் தடுக்கப்பட்டது. அவ்வப்போது கத்தார் அணி கோல் அடிக்க முயற்சி மேற்கொண்டாலும், ஏதும் பலனளிக்கவில்லை. இறுதியாக இரண்டாம் பாதி ஆட்ட நேர முடிவில் மேலும் கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் கத்தார் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணி வெற்றிபெற்றது.

போட்டியை நடத்தும் நாடு முதல் போட்டியில் கோல் அடிக்காமலேயே தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும். 

 
கடந்த ஆண்டு ரஷ்யா 5-0 என்று சவுதி அரேபியாவை வீழ்த்திய நிலையில், இந்த ஆண்டு கத்தார் கோல் அடிக்காமலேயே தோல்வியை சந்தித்துள்ளது. 
 
92 ஆண்டுகளில் தொடரை நடத்திய நாட்டின் அணி, முதல் போட்டியில் தோல்வியடைவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18