விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

சீஸ் பிரெட் போண்டா

15 September, 2022, Thu 4:52   |  views: 3319

 இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். 

 
தேவையான பொருட்கள்: 
 
உருளைக்கிழங்கு - 4 
கேரட் - 1 
கோஸ் - 1/2 கப் 
குடை மிளகாய் - 1 
சீஸ் - 1 கப் 
பச்சை மிளகாய் - 2 
பூண்டு விழுது - அரை ஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
பிரெட் - 12 துண்டுகள் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
சீஸ், கேரட்டை துருவிக்கொள்ளவும். கோஸ், குடைமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். 
 
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கேரட் துருவியது, கோஸ், குடைமிளகாய் போட்டு அதனுடன் துருவிய சீஸ், பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். 
 
பின்னர் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதனை நீரில் நனைத்து, பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து, பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும். 
 
இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான சீஸ் பிரெட் போண்டா தயார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

சேமியா இட்லி

24 January, 2023, Tue 14:11   |  views: 614

ப்ரோக்கோலி பொரியல்

22 January, 2023, Sun 5:34   |  views: 916

மசால் வடை

14 January, 2023, Sat 3:53   |  views: 2434

அவல் பொங்கல்

11 January, 2023, Wed 13:27   |  views: 2477

கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல்

6 January, 2023, Fri 16:27   |  views: 3045
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18