விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலகத்திலேயே 2வது உயரமான மரம் சீனாவில் கண்டுபிடிப்பு

12 October, 2022, Wed 10:15   |  views: 4565

உலகத்திலேயே 2வது மிக உயரமான மரம் சீனாவின் சியாச்சி பகுதியான திபெத்தில் உள்ள வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இதன் வயது சுமார் 380 ஆண்டுகள் என்று தாவரவியல் சீன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காலம் காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வரும் இந்த பகுதி தற்போது சுயாட்சி தகுதி பெற்ற ஒரு நிலப்பரப்பு. அமைதி மற்றும் பசுமைக்கு பெயர்பெற்ற திபெத்திற்கு தற்போது புதிய சாதனை ஒன்று சொந்தமாகியிருக்கிறது. 
 
உலகத்திலேயே 2வது மிக உயர்ந்த மரம் திபெத் அடர்வனத்தில் இருப்பதை சீன தாவரவியல் நிபுணர்கள் துல்லியமாக அளவிட்டு பதிவு செய்துள்ளனர்.
 
திபெத்தில் ஸாயூ மாவட்டத்தில் 250 அடிக்கு மேல் வளர்ந்த ஏராளமான மரங்கள் இருப்பதை அறிந்த சீனாவின் பல்வேறு தாவரவியல் ஆய்வு நிறுவனங்கள், அவற்றை அளவிடும் கூட்டு நடவடிக்கையில் இறங்கின. அப்போது வெர்ஜின் பாரஸ்ட் பகுதியில் உள்ள 'Abies ernestil' வகையை சார்ந்த மரம் ஒன்று 83.4 மீட்டர் அதாவது 273 அடி உயரம் வளர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. இதன் வயது 350 ஆண்டுகள் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். 
 
இதையடுத்து சீன வரலாற்றை முதன்முறையாக அதிக உயரமாக வளர்ந்திருக்கும் மரத்தினை தாவரவியல் நிபுணர்கள் அளவீடு செய்து படம் பிடித்ததுடன் அதன் செல் மாதிரிகளை சேகரித்து பாதுகாத்துள்ளனர்.
 
அதிநவீன டிரோன்களின் உதவியுடன் மரத்தின் உயரத்தை அவர்கள் துல்லியமாக அளவிட்டுள்ளனர். இந்த மரத்தின் மீது சுமார் 50க்கும் மேற்பட்ட பிற தாவர வகைகள் வளர்ந்திருப்பதையும் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட மரத்தின் பல்வேறு பகுதிகளை 160 படங்களாக பதிவு செய்து ஆய்வாளர்கள், அவற்றையெல்லாம் தொகுத்து ஒரே படத்தை உருவாக்கியுள்ளனர்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18