விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

சிக்கன் தோசை

6 October, 2022, Thu 8:03   |  views: 4194

 குழந்தைகளுக்கு உணவுகளை வித்தியாசமான செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சிக்கன் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

 
தேவையான பொருட்கள்: 
சிக்கன் கொத்துக்கறி - 200 கிராம் 
சின்ன வெங்காயம் - 10 
தக்காளி - 1 
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
மிள்காய் தூள் - 2 டீஸ்பூன் 
பச்சைமிளகாய் - 1 
கரம்மசாலாத்தூள் - 1 சிட்டிகை 
எண்ணெய், உப்பு - தேவைக்கு 
கொத்தமல்லி - சிறிதளவு 
முட்டை - 1 
தோசை மாவு - 1 கப் 
 
செய்முறை: 
 
சிக்கன் கொத்துக்கறியை நன்றாக கழுவி வைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 
 
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இதையும் படியுங்கள்: பத்தே நிமிடத்தில் செய்யலாம் இட்லி கபாப் வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 
 
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும். அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சேர்த்து வதக்கவும் பின்பு கொத்துக்கறியை போட்டு வதக்கி உப்பு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு சுருண்டு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். 
தோசைக்கல்லை காயவைத்து மாவை கனமான தோசையாக வார்த்து அதன் மேல் கொத்துக்கறி கலவையை பரப்பி அதன் மேல் முட்டையை அடித்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

நாட்டு கோழி குருமா

6 February, 2023, Mon 4:06   |  views: 721

காலிப்ளவர் பகோடா

31 January, 2023, Tue 14:42   |  views: 1986

சேமியா இட்லி

24 January, 2023, Tue 14:11   |  views: 1723

ப்ரோக்கோலி பொரியல்

22 January, 2023, Sun 5:34   |  views: 2075

மசால் வடை

14 January, 2023, Sat 3:53   |  views: 3487
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18