விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பாகிஸ்தானுக்கு எதிராக ரி-ருவென்டி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

3 October, 2022, Mon 2:16   |  views: 1833

 சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான ஏழாவது ரி-ருவென்டி போட்டியில் இங்கிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

 
இந்த வெற்றியின் மூலம் இதன்மூலம் தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
 
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 
 
இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகள் நடந்து முடிந்ததில் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் சமனிலை வகித்தன.
 
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான ஏழாவது போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. 
 
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ஓட்டங்களை எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் மலான் அதிரடியாக ஆடி 78 ஓட்டங்களை எடுத்தார். 
 
கடைசி கட்டத்தில் டுகெட் 19 பந்தில் 30 ரன்னும், புரூக் 29 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர். இதனால் அந்த அணி 200 ரன்களை கடந்தது.
 
இதையடுத்து, 210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18