விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பூமியில் எத்தனை எறும்புகள் உள்ளன? அது எப்படிக் கணக்கிடப்பட்டது?

21 September, 2022, Wed 5:33   |  views: 5603

பூமியில் குறைந்தது 20 ஆயிரம் டிரில்லியன் எறும்புகள் உள்ளதாகப் புதிய ஆய்வு கூறுகிறது.

 
உலகெங்கும் பல்லுயிர்ச்சூழலின் இன்றியமையாத பகுதியாக இருக்கும் எறும்புகளின் மொத்த எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. 
 
எறும்புகளின் உலகளாவிய எண்ணிக்கையைத் தீர்மானிப்பது அவற்றின் வாழ்விடத்தில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை அளவிடுவதற்கு முக்கியம் - பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளும் அவற்றில் அடங்கும்.
 
உலகில் 15,700க்கும் அதிகமான எறும்பு வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எறும்புகள் இயற்கைச் சூழலுக்குக் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன.
 
விதைகளைப் பரவச்செய்து, இதர உயிரினங்களின் உணவுக்கு வழிவகுக்கின்றன. வேட்டையாடும் உயிரினமாகவும், இரையாகவும் இருக்கின்றன.
 
ஏற்கனவே சில ஆய்வுகள் உலகளாவிய எறும்புகளின் தொகையை மதிப்பிட முயற்சி செய்துள்ளன. இந்தப் புதிய முயற்சியின் கீழ், நிலத்தில் உள்ள எறும்புகளை அளவிட்ட 465 ஆய்வுகள் ஆராயப்பட்டன. 
 
அதன் தகவல் Proceedings of the National Academy of Sciences (PNAS) எனும் சஞ்சிகையில் வெளியானது. 
 
அந்த ஆய்வுகள் இரு நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளன. குறிப்பிட்ட காலவரையில் ஊர்ந்து செல்லும் எறும்புகளைப் பிடிக்கப் பொறிகளைப் பொருத்துவது. மற்றொன்று, தரையில் உள்ள இலைமீது செல்லும் எறும்புகளை கணக்கிடுவது. 
 
அனைத்துக் கண்டங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், மத்திய ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் தரவுகள் குறைவாக உள்ளன; அல்லது தரவுகள் அறவே இல்லை. 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18