விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிளாஸ்டிக்கை சிதைக்கும் என்சைம்கள்; விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள புதிய தொழில்நுட்பம்

31 May, 2022, Tue 18:56   |  views: 11210

பிளாஸ்டிக் கழிவுகள் உலகில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வரும் நிலையில், பிளாஸ்டிக்கை சில மணி நேரங்களிலேயே எளிதில் அழிக்கும் வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது உலகிற்கு பெரும் நிம்மதி அளிக்கும் விஷயம் என்றால் மிகையில்லை.
 
நிலத்திலும் நீரிலும் ஆண்டு தோறும் கொட்டப்படும் லட்சக்கணக்கான டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள், நிலம் மற்றும் நீர் வாழ் உயிரினங்களுக்கு எமனாக மாறுகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக்கை அழிக்கும் நொதி, உலகில் பேரழிவை தடுக்கும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்பப்படுகிறது.
 
பிளாஸ்டிக்குகள் இயற்கையாக சிதைவதற்கு பொதுவாக நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். பிளாஸ்டிக் கழிவுகள் உலகில் சுற்றுச்சூழலை பாதிக்கும் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. 
 
இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள விஞ்ஞானிகள் இப்போது குறைந்த நேரத்தில் பிளாஸ்டிக் கூறுகளை உடைக்கும் மிகவும் பயனுள்ள என்சைம்கள் அதாவது நொதியைக் கண்டுபிடித்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள பிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்து வரும் இந்த  தீவிர சூழ்நிலையில், இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
 
பாலியஸ்டர் ஹைட்ரோலேஸ் (PHL7) எனப்படும் நொதி சமீபத்தில் ஒரு ஜெர்மன் கல்லறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட PHL7 ஆனது LLC-ஐ விட இரண்டு மடங்கு தீவிரமானது என்று ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பான முடிவுகள் தற்போது 'CamsusChem' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
 
ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் வொல்ப்காங் ஜிம்மர்மேன் கூறுகையில், இந்த நொதி 16 மணி நேரத்திற்குள் பாலிஎதிலின் டெரெப்தாலேட்டை 90 சதவீதம் வரை சிதைக்கும் திறன் கொண்டது. மாற்று ஆற்றல் சேமிப்பு பிளாஸ்டிக் மறுசுழற்சி செயல்முறைகளை நிறுவுவதில்,  இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டிருக்கும்.
 
கூடுதலாக, PHL7 பிளாஸ்டிக்கை சிதைக்க எந்த முன் சிகிச்சையும் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பிளாஸ்டிக்கை பொடிக்காமல் அல்லது உருக்காமலேயே சிதைக்கும் திறன் கொண்டது. எனவே, PHL7 போன்ற சக்திவாய்ந்த நொதிகளிலிருந்து குறைந்த கார்பன் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களைப் பயன்படுத்தாமல், ஒரு முக்கியமான PET பிளாஸ்டிக்கின் நிலையான மறுசுழற்சி செயல்முறையை  மேற்கொள்ள  முடியும்.
 
இந்த நொதியின் உதவியுடன், பிளாஸ்டிக் காரணமாக எழுந்துள்ள சுற்றுசூழல் நெருக்கடியை விரைவில் சமாளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதுவரை பிளாஸ்டிக்கை ஒழிக்க மறுசுழற்சி மட்டுமே ஒரே வழி. இருப்பினும், இதன் காரணமாக, 10 சதவீத பிளாஸ்டிக் கழிவுகளை மட்டுமே மறுசுழற்சி செய்ய முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18