விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நெருப்பை பார்த்து பதறும் நாய் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

14 June, 2022, Tue 16:30   |  views: 13038

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் க்யூட் ரகத்தைச் சேர்ந்தது. மனிதர்களோடு மனிதர்களாக ஒன்றி அவை செய்யும் செயல்களும், கொடுக்கும் முக பாவனைகளும் ரசிக்கும்படியாக இருக்கும்.
 
அதுமட்டுமின்றி தன் உரிமையாளருடன் உரிமையோடு சண்டை போடுவது, உடனடியாக சமாதானம் ஆகாதது, வீட்டில் உள்ளவர்களுடன் அமர்ந்து டிவி பார்ப்பது என வீட்டில் ஒருவராகவே செல்ல பிராணிகள் மாறிவிடும்.
 
மேலும் அந்த வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் குழந்தைகளை பாதுகாத்து சிறு குழந்தையாகவே மாறி விளையாடும். அந்த வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பலரை கவரும்.
 
முக்கியமாக மனிதர்களுக்கு சாதாரணமாக தெரியும் செயல்கள் எல்லாம் செல்ல பிராணிகளுக்கு அசாதாரணமாக தெரியும். உதாரணத்திற்கு கண்ணாடியில் தன்னை தானே பார்த்துக்கொண்டு மிரட்சியுடன் நிற்கும்.
 
இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது நாய் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்ஸை கவர்ந்துள்ளது.
 
அந்த வீடியோவில் ஒருவர் சிகரெட் பற்ற வைக்கும் லைட்டரிலிருந்து நெருப்பை வரவைத்து தனது விரல்களை கொண்டு அணைத்துவிடுகிறார். அதனை பார்க்கும் நாயானது பதறி துள்ளி மிரட்சியுடன் பார்க்கிறது.
 
இதேபோல் இரண்டு முறை அவர் அப்படி செய்ய நாயும் பதறி துள்ளி மிரட்சியடைகிறது. மீண்டும் ஒருமுறை அவர் நெருப்பை லைட்டரிலிருந்து வரவைத்தபோது நாய் பதறியடித்து அந்த இடத்திலிருந்து ஓடிவிடுகிறது. 
 
இந்த வீடியோவை பார்த்த பலரும் நாயின் க்யூட்னெஸ்ஸை ரசித்து புகழ்ந்து வீடியோவினை பகிர்ந்து வைரலாக்கிவருகின்றனர். இதுவரை இந்த வீடியோவானது 3,000க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று, 450 ரீட்விட்டுகளைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18