விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

அழகுக்கலை நிபுணர் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

Bail விற்பனைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வாடகைக்குத் தேவை

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

காட்டில் ஒரு வழக்கு

11 April, 2022, Mon 19:55   |  views: 11030

""ஐய்யோ... அம்மா'' அப்படீண்ணு யாரோ அலறதைக் கேட்டு பறவைகள் திடுக்கிட்டுச்சு. சத்தம் கேட்ட திசையைப் பாத்து வேகம் வேகமாப் பறந்திச்சு. அங்கே ஒரு ஆந்தை வயிற்றைப் பிடிச்சபடி வயால துடிச்சுகிட்டு இருந்தது. அதைப் பாத்த ஆந்தையோடு நெருங்கிய நண்பன் காகம் ஓடிப்போய் ஆந்தையோட முதுக தடவிக் குடுத்திச்சு. "என்ன நடந்திச்சு? எப்படி வயித்த வலி வந்திச்சு?'" அப்படீண்ணு அன்பா விசாரிச்சுது.

 
"ஏதோ ஒண்ணு என் வயித்துல வந்து மோதிச்சு, அவ்வளவுதான் எனக்குத் தெரியும். வேற ஒண்ணும் எனக்குத் தெரியாது.... ஐயோ உயிர் போகுதே?'' ஆந்தை மறுபடியும் வயித்துப் பிடிச்சுகிட்டு அழத் தொடங்கிச்சு. காகம் ஆந்தையைக் கூட்டிகிட்டு வைத்தியர் கிட்டோ போச்சு. காட்டு வைத்தியரான குயில் அதோட வீட்டிலே ஏதோ பச்சிலைகளைப் பிழிஞ்சு சாறு எடுத்துகிட்டிருந்திச்சு.
 
'"வைத்தியரே.. .வைத்தியரே.. என் நண்பன் வயித்துவலியால துடிக்கிறான். காப்பாத்துங்க காப்பாத்துங்க..'' ண்ணு கத்திச்சு காகம்.
 
செஞ்சுகிட்டிருந்த வேலையை அப்படியை விட்டுட்டு குயில் எழுந்து வந்திச்சு. ஆந்தையைப் பரிசோதிச்சுப் பாத்துச்சு.
 
"என்ன சாப்பிடக்கூடாததை ஏதையாச்சும் சாப்பிட்டியா?'' அப்படீண்ணு ஆந்தைகிட்டே கேட்டிச்சு.
 
"நான் எதுவும் சாப்பிடலே... ஏதோ ஒண்ணு என் வயித்து மேலே வந்து மேதிச்சு. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். ஐயோ வலி உயிர் போகுது... வேகமா எதாவது பண்ணுங்க வைத்தியரே'' ஆந்தை ஆழாத குறயா கேட்டுச்சு.
 
குயில் வைத்தியர் ஆந்தையோட வயித்தைக் கூர்ந்து கவனிச்சாரு, தொட்டுப் பாத்தாரு. அவருக்கு விஷயம் புரிஞ்சிருச்சு.
 
யாரோ ஒரு பையன் ஊண்டிவில்ல களிமண் உருண்டையை வைச்சு ஆந்தையைக் குறிபாத்து விட்டிருக்கான் அது வயித்தில் இருக்கு. அதனாலெ நான் சொல்றதைக் கவனமாகக் கேட்டுங்குங்க. ஆந்தையை மாங்குளத்துக்குக் கூட்டிட்டுபோ. அந்தக் குளத்திலே கழுத்து மட்டும் வெளியே தெரியற மாதிரி ஒரு நாள் முழுக்க ஆந்தை தண்ணீலே நிக்கட்டும். வயிற்றுவலி சரியாயிடும்ணு சொல்லிட்டு மறுபடியும் மூலிகையைப் பிழியத் தொடங்கிச்சு குயில் வைத்தியரு.
 
காகம் ஆந்தையைக் கைத்தாங்கலா மாங்குளத்துக்குக் கூட்டிட்டுப் போச்சு. ஆந்தையைத் தண்ணீரில் ஏறக்கி நிக்க வச்சுது. காகம் ஆந்தைக்கு உணவு கொண்டு வரப் போச்சு.
 
நேரம் ஆக ஆக களிமண் உருண்டை மெல்ல மெல்ல தண்ணீல கரையத் தொடங்கிச்சு. ஒருநாளாச்சு. ஆந்தை தண்ணீரிருந்த தாவி வெளியே வந்திச்சு. ஆகா... என்ன ஆச்சரியம் வயித்து வலி சூரியனைக் கண்ட பனிபோல மாயமாய் மறஞ்சு போயிருச்சே அப்படீண்ணுட்டு விர்ணு மேலே பறந்துச்சு. சர்ணு கீழே ஏறங்கிச்சு. சிறகை ஆசைக்காம வானத்திலெ மெதந்திது. சந்தோஷத்தால கத்திச்சு.
 
ஆந்தை மகிழ்ச்சியா பறக்கறது பாத்திட்டு ரெண்டு பேர் அங்கே வந்தாங்க. ஆந்தை அவர்களைப் பாத்ததும் கீழே இறங்கி வந்திச்சு. என்ன ஆந்தையாரே வயித்து வலியெல்லாம் குணமாயிருச்சா? குயில் வைத்தியர் சிரிச்சுகிட்டே கேட்டாரு.
 
ஒ போயே போயிருச்சு ஆந்தை மகிழ்ச்சியாக் சொல்லிச்சு.
 
"சரி என் வைத்தியத்துக்குத் தரவேண்டிய கட்டணத்த தா" அப்படீண்ணு குயில் கேட்டுச்சு.
 
"கட்டணமா? எதுக்கு? தண்ணீ தானே என் வயித்து வலியைக் குணமாக்கிச்சு.
 
நீங்க ஒண்ணும் செய்யயே பிறகு எதுக்குக் கட்டணம் கேட்கறீங்க?'' ஆந்தை கேலியா கேட்டிச்சு.
 
குயில் வைத்தியருக்கு ஒரே வருத்தமாப் போயிருச்சு. அது பரிதாபமா காகத்தைப் பாத்துச்சு. அதை கவனிச்ச ஆந்தை... "என்ன பாக்கறீங்க, நீங்க என்ன காட்டுக்குப் போனீங்களா, மூலிகை பறிச்சீங்களா, சாறு பிழிஞ்சீங்களா? ஏதற்காக உங்களுக்குதக் தரணும் கட்டணம் அப்படீண்ணு கோபமா கேட்டுச்சு.
ஆந்தை சொன்னதக் கேட்டு காகமும் வாயடைச்சுப் போச்சு.
 
"ம்ம்.. அப்படியா சொல்றே... நான் காட்டு நீதிமன்றத்திலே வழக்குப் போடப் போறேன்" என்றபடி குயில் விருட்டுண்ணு பறந்து போச்சு.
"வழக்குப் போடறதுண்ணு போடட்டும். நீதிமன்றத்திலே பாத்துக்கலாம்'" அப்படீண்ணு சொல்லிட்டு ஆந்தையும் பறந்து போச்சு.
 
அடுத்தநாள் காட்டு நீதி மன்றம் கூடிச்சு. விலங்குகளும் பறவைகளும் நீதி மன்றத்துக்கு முன்னாலே கூடியிருந்தாங்க. நீதிபதி முயல் வந்தார். எல்லாரும் எந்திருச்சு நின்னு நீதிபதிக்கு மரியாதை செலுத்தினாங்க. முயல் நீதிபதி உயரமான இருக்கையில உக்காந்தாரு. அவரு உக்காந்ததும் எல்லாரும் அவங்கவங்க இடத்தில் உக்காந்தாங்க.
 
நீதிபதி முதல்ல ஆந்தையைக் கூப்பிட்டாரு. ஆந்தை நடந்ததையெல்லாம் ஒண்ணுவிடாம சொல்லிச்சு.
 
என்னோட வயித்து வலிக்கு மருந்தா இருந்தது தண்ணீ தான். குயில் எதுவும் செய்யலயே. அதனால குயில் வைத்தியருக்குக் கட்டணம்
கொடுக்கத் தேவையில்லைண்ணு தீர்ப்பளிக்கணும்ணு கணம் நீதிபதி அவர்களைக் கேட்டுக்றேன் அப்படீண்ணு சொல்லிச்சு.
 
அடுத்ததாக குயில் தன்னோட வாதத்தை முன் வச்சுது. எல்லா நோய்க்கும் மருத்து கொடுத்துத்தான் குணப்படுத்துணும்ணு எந்த வைத்தியபக் புத்தகத்திலெயும் சொல்லப்படவில்லை. சில நேரங்கள்ல அறிவுரை சொல்றதும் மருந்தாகும். என ஆந்தை எனக்குக் கட்டணம் தரணும்ணு தீர்ப்பு வழங்கணும்ணு கேட்டுச்சு.
 
ரெண்டு பேரோட வாதங்களையும் கூர்ந்து கேட்ட முயல் நீதிபதி தீர்ப்பு வழங்கினாரு.
 
குயிலோட வாதத்தை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுது. எனவே ஆந்தைக் குயிலுக்குக் கட்டணம்கொடுத்தேயாக வேண்டும். ஆந்தை கட்டணம் கொடுக்க மறுத்தா ஆந்தையை வைத்தியருகிட்ட கூட்டிட்டுப் போன காகம் குயிலுக்குக் கட்டணம் கொடுக்கணும் இதுதான் தீர்ப்பு அப்படீண்ணு முயல் நீதிபதி எழுந்தாரு.
 
ஐய்யோ... நீதிபதி அவர்களே கொஞ்சம் பொறுங்க...'' அப்படீண்ணு சொல்லிட்டு காகம் பேசத் தொடங்கிச்சு.
 
"நானோ பரம ஏழை. அங்கும் இங்கும் பறந்து போய் எச்சில்களைத் திண்ணு வாழ்ந்திட்டிருக்கேன். என்னாலெ எப்படிக் கட்டணம் கட்ட முடியும்.? அப்படீண்ணு சொல்லிச்சு காகம் பேசறதக் கேட்ட குயிலு... "காக்கையாரே, எனக்கு மூலிகைகளைத் தேடிக் கண்டுபிடிக்கணும் புதுப்புது மருந்துக தயாரிக்கணும், அதனால் அடையிருந்து குஞ்சு பொரிக்கவோ, குஞ்சுகளுக்குத் தீனி கொடுத்து வளக்கவோ நேரமில்லை.
 
அதனாலெ நான் உன்னோட கூட்டில முட்டைபோடறேன். நீ அடைகாத்து குஞ்சு பொரிச்சு குஞ்சுகளைக் கவனிக்கணும். இதுக்கு நீ ஒத்துகிட்ட கட்டணம் தர வேண்டாம்.'' அப்படீண்ணு சொல்லிச்சு.
 
காகமும் அதுக்கு ஒத்துக்கிச்சு. காகமும் காகத்தோட நண்பர்களும் ஒண்ணா சேந்து நன்றி மறந்த ஆந்தையைக் கொத்தி விரட்டிச்சு. அன்னையிருந்து
குயில் காக்கையோட கூட்டிலே முட்டைபோடத் தொடங்கிச்சு. காக்கைககளோட தாக்குதலுக்குப் பயந்துகிட்டு ஆந்தை பகல்லெ
தலகாட்டாம எங்கேயாவது மறஞ்சிருக்கத் தொடங்கிச்சு.
 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:07 45 41 98 33
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 09 70 40 50 71
 06 64 96 80 79