விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

கருவாட்டு பிரியாணி

8 January, 2022, Sat 9:17   |  views: 8073

 சாதாரணமாக நாம் அனைவரும் கருவாட்டில் வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்போம். யாரவது பிரியாணி செஞ்சு சாப்பிட்டுருக்கிங்களா? ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பாக பிரியாணி பிரியர்களுக்கும் கருவாட்டு பிரியர்களுக்கும் பிடிக்கும்.

 
 
தேவையான பொருட்கள்
 
கருவாடு - அரை கிலோ
 
சின்ன வெங்காயம் - அரை கிலோ
 
பழுத்த தக்காளி - அரை கிலோ
 
பச்சை மிளகாய் - 5
 
மிளகாய் பொடி - தேவையான அளவு
 
தயிர் - ஒரு கப்
 
எலுமிச்சை - அரை பழம்
 
கொத்தமல்லி இலை - ஒரு கைபிடி
 
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
 
புதினா - ஒரு கைபிடி
 
பட்டை, ஏலம், கிராம்பு,பிரியாணி இலை - தலா இரண்டு
 
உப்பு- தேவையான அளவு
 
எண்ணெய் - 200 மில்லி
 
நெய் - 50 மில்லி
 
பச்சரிசி - 1 கிலோ
 
 
 
 
செய்முறை:
 
பச்சரிசியை ஊர வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் கருவாட்டை நன்றாக கழுவி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
 
பிரியாணிக்கு தேவையான அனைத்தையும் நறுக்கிக் கொள்ள வேண்டும். முதலில் தக்காளி, வெங்காயத்தை வெட்டிக்கொள்ள வேண்டும்.
 
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாக காய வைத்து கருவாடு பொரித்த எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளிக்க வேண்டும். பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
 
பின்னர் அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் தயிர் சேர்க்க வேண்டும். அதன் பிறகு வறுத்த கருவாட்டை போட்டு வேக விட வேண்டும்.
 
அதன்பின் ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றி கொதிக்க் வைக்க வேண்டும். கொதி வந்ததும் நெய் ஊற்றி அதில் ஊற வைத்த அரிசியை போட வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.
 
அதன் பிறகு தட்டை போட்டு 20 நிமிடம் மூடி வைக்க வேண்டும். அதன்மேல் கனமான பத்திரம் அல்லது தோசை கல்லை வைக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான கருவாட்டு பிரியாணி ரெடி.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

பன்னீர் மசாலா!

29 November, 2022, Tue 16:53   |  views: 720

சிக்கன் லாலிபாப்

26 November, 2022, Sat 6:32   |  views: 1198

ரவை பாயாசம்

21 November, 2022, Mon 15:42   |  views: 1615

பன்னீர் ஆம்லெட்

18 November, 2022, Fri 17:21   |  views: 1705

முட்டை போண்டா

15 November, 2022, Tue 15:51   |  views: 2172
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18