விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

காணாமல் போனதாகக் கருதப்படும் உலகின் ‘5’ மர்ம தீவுகள்

4 February, 2022, Fri 7:35   |  views: 7855

கிரேக்க புராணங்களில் காணாமல் போன அட்லாண்டிஸ் தீவு பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. பலர் அட்லாண்டிஸ் புராணம் மட்டுமே என்று கூறுகிறார்கள். அதே சமயம் உலகில் மறைந்து வரும் பல தீவுகளைப் போலவே இதுவும் மறைந்திருக்க வேண்டும் என்றும் பலர் நம்புகிறார்கள். 

 
உலகில் ஒரு காலத்தில் இருந்த பல தீவுகள் இப்போது காணவில்லை. அவை என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவை தொலைந்து போனதாக கருதப்படுகின்றன.  இது வரை காணாமல் போயுள்ள தீவுகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன
 
வோர்டோனிசி தீவு (Vordonisi Island) - துருக்கியின் மாமாரா கடல் தீவு, 1010 இல் நிலநடுக்கத்தால் காணாமல் போனது. இந்த தீவு  2013 இல் மீண்டும் தோன்றிய நிலையில், 2016 ஆம் ஆண்டில் மீண்டும் காணாமல் போனது. 886 ஆம் ஆண்டில் முதலாம் ஃபோடியஸ் என்ற பைசண்டைன் மன்னர் அதன் மீது ஒரு மடத்தை கட்டினார் என்று வரலாற்றில் கூறப்பட்ட நிலையில், தீவு வெளியே தெரிந்த போது அந்த மடத்தையும் காண முடிந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த தீவைப் பற்றி மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மாவி தீவு ( Maui Nui  Island )- மாவி தீவு என்பது ஹவாய் தீவுகளின் மிகப்பெரிய தீவு ஆகும். இதில் மேலும் நான்கு தீவுகள் உள்ளன. மாவி, மொலோகாய், லனாய், கஹோலவே தீவு. முன்பு இது பிக் மாவி அல்லது Maui Nui என்ற பெரிய தீவாக இருந்தது. இது தற்போதைய ஹவாய் தீவை விட ஒன்றரை மடங்கு பெரியதாக இருந்தது. இதையும் தற்போது காணவில்லை
 
ஃபெர்டினாண்டியா தீவு (Ferdinandea ) - இந்த தீவு, சிசிலி நகரத்திலிருந்து 19 மைல் தொலைவில், சில சமயங்களில் மறைந்து, சில சமயங்களில் மீண்டும் தோன்றும். இது முதன்முதலில் 264-241 B.C.E  கண்டறியப்பட்டது.
 
மொரிஷியா தீவு (Mauritia Island)- டைனோசர்கள் உலகில் இருந்து மறைந்த போது, அவைகளுடன் இந்தியப் பெருங்கடலின் இந்த தீவும் மறைந்துவிட்டது. இந்த தீவை யாரும் பார்த்ததில்லை, எனவே இந்த தீவு புராணமாக மட்டுமே கருதப்படுகிறது.
 
சாண்டி தீவு (Sandy Island) - இது சேபிள் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. நியூ கலிடோனியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே பவளக் கடலில் அமைந்துள்ள இந்த தீவு சற்று விசித்திரமானது. கூகுள் எர்த்தில் காணப்படும் இந்த தீவு, இது வரை எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டாக்டர். மரியா செட்டன் 2012 ஆண்டு பிபிசி நேர்காணலில், இந்த தீவு வரைபடத்திலும் கூகிள் எர்த்திலும் தெரியும், ஆனால் நாங்கள் அங்கு சென்றடைந்தபோது அதனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18