விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஸ்பானிஷ் திருவிழாவில் ‘தீ’ குளிக்கும் குதிரைகள்

19 January, 2022, Wed 12:06   |  views: 7754

லாஸ் லுமினாரியாஸ் (Las Luminarias), ஸ்பானிஷ் திருவிழாவானது ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) தொடங்கியது. பாரம்பரியமாக ஒரு சுத்திகரிப்பு விழாவாக கொண்டாடப்படும், இந்த நிகழ்வில் சுமார் 100 குதிரைகள் நெருப்பில் குதித்தன. கோவிட் தொற்றுநோய் பரவல் தொடங்கிய பிறகு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 
ஸ்பெயினின் விலங்குகளின் புரவலரான புனித அந்தோணியர் தினத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16 அன்று லாஸ் லுமினாரியாஸ் என்ற விழாவில், சான் பார்டோலோம் டி பினாரஸில் (San Bartolome de Pinares) பாரம்பரிய இரவு நேர கொண்டாட்டம் நடைபெறுகிறது.
 
கொரோனா தொற்று (Corona Virus)நோய் கட்டுப்பாடுகள் காரணமாக லாஸ் லுமினாரியாஸ் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. குதிரை உரிமையாளர்கள், ஆர்வலர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்து, குறுகிய கற்களால் ஆன தெருக்களில், தீ மூட்டப்பட்டு, அதன் வழியாக குதிரை பாய்ந்து செல்கிறது. நெருப்பின் புகை மற்றும் தீப்பிழம்புகளால் விலங்குகளை சுத்தப்படுத்துவதற்காக, ஸ்பெயினில் பாரம்பரியம் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
 
ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்வில், குதிரைகள் தீப்பிழம்புகளுக்கு மேல் குதித்த பிறகு, ஆர்வலர்கள் நடனமாடவும் மது அருந்தியும் கொண்டாடுகின்றனர்.
 
"இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடைபிக்கப்பட்டு வரும் பாரமபரியம். அதனால் விலங்குகளுக்கு உடல்நிலை சீராக, பாதிப்பு ஏதும் ஏற்படாமல இருக்கும். பாதிரியார்கள் நெருப்பால் குதிரைகளை ஆசீர்வதிப்பார்கள். அதனால் அவை தீயில் குதித்து சுத்திகரிக்கப்படுகின்றன," என்று உள்ளூர் குடியிருப்பாளர் 64 வயதான ஃபெர்மின் அபாட் (Fermin Abad), 64 கூறினார்.
 
விழாக்களில் சுமார் 100 குதிரைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் பங்கேற்றதாக ராய்ட்டர்ஸ்  செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
பல ஆண்டுகளாக விலங்குகள் உரிமைக் குழு இந்த நிகழ்வு குறித்து விமர்சனம் தெரிவித்து வரும் போதிலும், தீக்காயங்களைத் தவிர்ப்பதற்காக குதிரை முடியை வெட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதால் குதிரைகள் பாதிக்கப்படுவதில்லை என்று குதிரை உரிமையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18