விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வீடு வாடகைக்கு தேவை

ANNE ABI AUTO

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

அன்பை விதையுங்கள் அதையே அறுவடை செய்வீர்கள்

4 May, 2021, Tue 10:21   |  views: 7139

*ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.*
 
*பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்…..*
 
*அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,*
 
*இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று…..*
 
*அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.*
 
*உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு…,*
 
*இல்லையேப்பா..,*
*நல்லா தானே இருக்கு” என்பார்.*
 
*உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.*
 
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,
 
ஏங்க..
*”பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு”….!!*
 
*”என் தினமும் இப்படி நல்லா இல்லைனு*
*சொல்லி டிராமா போடறீங்க”*
 
உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்…..,
 
*”அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க”….!!*
 
ஆனாலும்…,
*”தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க”…..!!*
 
நான் இப்படி குறை கூறி கொடுப்பதால்…..,
*” தினம்*
*அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க என்றார்”……!!*
 
*தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு……,*
 
அந்த பாட்டியிடம்,
 
*”அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்”…..!!*
 
*”இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்”….?*
 
உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு….,
 
*அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி….,*
 
*”கொடுத்து சாப்பிட வைக்கிறான்”……!!*
 
*இது எனக்கு தெரியாது என்று*
*நினைக்கிறான்…!!*
 
*”நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை”..!!*
 
மாறாக…
*” அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது”…*
என்றார் அன்போடு….,
 
*இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தான்*
*ஜீவன் இன்னும் இருக்கு…..!!*
 
*”அன்பை விதையுங்கள்”….!!*
 
*”அதையே அறுவடை செய்வீர்கள்”…….!!*

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்

என்றும் அழியாதது...!!

10 January, 2022, Mon 18:13   |  views: 414

உச்சிமலை வீடு

2 January, 2022, Sun 8:26   |  views: 722

வட்டிக்கு சேர்த்த பணம்

26 December, 2021, Sun 9:00   |  views: 1042

பெட்டிக்காரப் பெரியசாமி

18 December, 2021, Sat 7:22   |  views: 1324

பறக்கும் நட்சத்திரம்...!!

11 December, 2021, Sat 10:51   |  views: 1585
  முன்


Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி