விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

கடல் குதிரை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்....!

6 December, 2020, Sun 17:38   |  views: 2584

கடல் குதிரைகள் என்பது மிகவும் தனித்துவமான மற்றும் மக்களை கவரும் கடல் வனவிலங்கு இனங்களில் ஒன்றாகும். இந்த அழகான இனத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

 
குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், காணப்படும் மீன் இனங்களில் ஒன்று தான் கடல் குதிரை. இது பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும்.
இது சுமார் 6 சென்டி மீட்டர் முதல் 17 சென்டி மீட்டர் வரை நீளம் உடையது. மேலும் 4 கிராம் முதல் 14 கிராம் எடை உடையது.
 
கடற்குதிரைகள் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு பூமியில் தோன்றியவைகள் ஆகும். இதன் ஆயுட்காலம் 1 முதல் 5 ஆண்டுகள் .
 
கண்கள் மிக சிறியது. இது தன்னுடைய கண்களை எந்தப் பக்கமும் திருப்பி கொள்ளும். மேலும் குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம்.
 
கடல் குதிரை 3 சென்டி மீட்டர் தொலைவில் இருந்து உணவை உறிஞ்சும். மேலும் இது சிறிய மீன்களுக்கு உணவளிக்கிறது.
 
கடல் குதிரைகளுக்கு பற்களும் வயிற்றும் இல்லை. இது சாப்பிடும் உணவு அவற்றின் செரிமான அமைப்புகள் மிக விரைவாக செயல் படுகின்றன. இதனால் உணவு மிக விரைவாக அவர்களின் உடல்கள் வழியாக நகர்ந்து அதிக ஊட்டச்சத்தை உறிஞ்சும். அவர்கள் உயிருடன் இருக்க கிட்டத்தட்ட தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
 
இவற்றின் வால்கள் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக பயன்ப்படுகிறது. நிலத்தில் வாழும் குதிரைகள் தங்கள் வால்களை ஈக்களை துரத்த பயன்ப்படுத்துகின்றன. ஆனால் கடல் குதிரை தங்கள் சக்திவாய்ந்த வால்களை உணவுக்கு சண்டையிடவும், புயலின் போது நங்கூரமிடுவதற்கும் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன.
இவை உயிருடன் வாழ கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 3,000 அல்லது அதற்கு மேற்பட்ட உப்பு இறால்களை உட்கொள்ளலாம்.
 
நண்டுகளுக்கு மிக பிடித்த உணவாக கடல் குதிரை உள்ளது.
கடல் குதிரை அதிகமாக சீவீட் என்னும் கடல் தாவரம் இருக்கும் இடத்தில் இருக்கின்றன. இது தன்னுடைய வாலை சீவீட் தாவரத்தின் மேலாக சுற்றி கொண்டு தலை கீழாக தொங்கும்.
இந்த தாவரத்தின் அடியில் இது அதிகமாக இருக்க காரணம் சீவீட் தாவரத்தின் நிறத்தில் இந்த மீன்கள் இருப்பது தான். இதன் அடியில் இருப்பதினால் எதிரிகளிடத்தில் மாட்டாமல் தப்பித்து விடுகிறது.
ஒவ்வொரு நாளும் காலையில் கடல் குதிரை இனவிருத்தி நடனங்களில் ஈடுபடுகின்றன.
உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குட்டிப்போடுகிறது.
ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை 200 ஆண் கடல் குதிரைகளின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும்.
 
அந்த முட்டைகளை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன.
இந்த முட்டைகள் சில நாள்கள் கழித்து பொரிக்கிறது. குஞ்சுகள் பொரித்த பிறகு சிறிது காலம் இதன் பையில்தான் வளர்கின்றன.
 
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் ஆண் கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது கடலுக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும்.
உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும். இது 50 முதல் 100 வரை குஞ்சுகளை பொரிக்கும்.
பிறக்கும் குஞ்சுகளின் நீளம் சுமார் ஒரு செ.மீட்டராக இருக்கும். இருந்தாலும் பெற்றோர் இதற்கு அதிக பாதுகாப்பு கொடுக்கின்றன.
 
உலகில் சுமார் 40 வகையான கடல் குதிரைகள் உள்ளன. அவற்றில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மட்டும் ஐந்து வகையான கடற்குதிரைகள் காணப்படுகின்றன.
புள்ளிகள் கொண்ட கடல் குதிரைகள் பிரபலமான அலங்கார மீன் என்பதால், அவை உலகளவில் அதிகளவில் பிடிக்கப்படுகின்றன.
இது ஆழம் குறைந்த கடல் பகுதிகளான கடற்புற்கள், பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் அதிகம் வாழ்கின்றன.
 
பெரும்பாலான மீன்கள் கடல் குதிரையை பெரிய அளவில் கண்டுகொள்வதில்லை.
பல்வேறு சிறப்புகளை உடைய இந்த மீன் விற்பனை விலை கிலோவுக்கு ரூ. 2000 முதல் ரூ. 5000 வரை உள்ளது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் ருசி மிகுந்த சாறு வகைகளும், மருத்துவப் பொருள்களும் தயாரிக்கின்றனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி