Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

10,000 தேனீக்களை வயிற்றில் மொய்க்கவிட்ட கர்ப்பிணிப் பெண்!

17 July, 2020, Fri 14:37   |  views: 1694

அமெரிக்காவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் தனது வயிற்றில் 10 ஆயிரம் தேனீக்களை மொய்க்க செய்தவாறு புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அப்படங்க்ள தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
 
தற்காலத்தில் அநேகமானோர் புதிதாக ஏதாவதொன்றை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் கர்ப்பிணிப் பெண்களும் தங்களது மகப்பேறுகாலத்தில் விதவிதமான கோணங்களின் நின்று போட்டோஷூட் நடத்துகின்றனர்.
 
மேற்குலகில் தற்போது இத்தகைய படப்பிடிப்புகள் சாதாரணமான நிகழ்வாகிப் போனாலும் அண்மையில் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள கர்ப்பிணிப் பெண்ணொருவர் நடத்தியுள்ள இந்த பொட்ஷுட் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
உளவியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற பெத்தானி கருலக் பேக்கர் என்ற இந்த பெண், தொழிற்சார் தேனி வளர்ப்பாளர் என்பது குறிப்பிடத்கத்கது. பீ த ப்யூசர் ((Bee the Future) என்ற பெயரில் தேனீ வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.
 
இந்நிலையில், தற்போது கர்ப்பமுற்றுள்ள அவர் தனது மகப்பேறு பொட்டோஷூட்டுக்காக எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதுடன் அவற்றில் அப்பெண் தனது வயிற்றில் தேனிக்களை மொய்க்க வைத்து எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இவற்றுடன் அவரின் கணவர் தன்னை முத்தமிடும் படத்தையும் அப்பெண் வெளியிட்டுள்ளார்.
 
'இது மிகவும் ஆபத்தானது. தயவுசெய்து முன் அனுபவமும் தேனீகள் பற்றிய அறிவும் இல்லாமல், இதனை யாரும் முயற்சித்துப் பார்க்க வேண்டாம்.
 
நான் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்த எனது மகப்பேறுகால புகைப்படங்களை இங்கு பதிவிட்டுள்ளேன். இது குறித்து எவரும் கவலைப்பட வேண்டாம்' என பெத்தானி தெரிவித்துள்ளார்.
 
'எனது வைத்தியரின் அனுமதியை பெற்றதன் பின்னரே இந்த புகைப்படத்தை எடுத்தேன். இதற்காக அண்ணளவாக 10 ஆயிரம் தேனீக்களை பயன்படுத்தினோம்' என்று மிகவும் சாதாரணமாக சமூக வலைதள பக்கத்தில் பெத்தானி பேக்கர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், இதனை சமூகவலைதளத்தில் பார்த்த பலரும் இந்த கர்ப்பிணிப் பெண்ணின் தைரியத்தை பாராட்டியுள்ள அதேவேளை, மேலும் சிலர் ஆபத்து நிறைந்த இந்த புகைப்படத்தை எடுத்ததையடுத்து கண்டித்தும் வருகின்றனர்.
 
அத்தோடு லைக்ஸ் பெறுவதற்காக இத்தகைய ஆபத்தான செயற்படுவதாக இன்னும் சிலர் தெரிவித்துவருகின்றனர்.
 
இதேவேளை, அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளதாவது, 'ஒரு வருடத்துக்கு முன்னர் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அதன் பின்னர் நான் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்தேன். சில மாதங்களின் பின்னர் மீண்டும் கருத்தரித்தேன்.
 
எனினும், முன்னரை போன்றே ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அதனை எவரிடமும் கூறவில்லை.
 
இந்நிலையில், கடந்த காலங்களில் எனது கணவரின் அரவணைப்பினால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டேன்.
 
நான் ஒரு ஆரோக்கியமான குழந்தையுடன் 37 வார கர்ப்பிணியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
 
இந்நிகழ்வுகளால் மீண்டும் புத்துயிர் பெற்றேன். இது ஒரு பெண்ணின் வயிற்றில் தேனீக்களை கொண்ட படம் என்பதை காட்டிலும் அதிகமான செய்திகளை கூறுகிறது.
 
ஒரு நாள் இந்த புகைப்படத்தை பார்க்கும் எனது குழந்தைகள் எனக்குள் இருக்கும் போர்வீரரை காண்பார்கள்' எனவும் பெத்தானி கருலக் பேக்கர் தெரிவித்துள்ளார்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்