Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகுங்கள்!

20 March, 2020, Fri 6:39   |  views: 822

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள ஏதுவாக தயாராகும்படி விளையாட்டு வீரர்களை சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது.

 
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்குமாறு உலகநாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
 
எனினும், நடப்பு ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பாக தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என சர்வதேச ஒலிம்பிக் குழு திட்டவட்டமாக கூறியுள்ளது.
 
அத்துடன், ஒலிம்பிக் போட்டி நடைபெற 4 மாதங்கள் உள்ள சூழலில், போட்டியை இரத்து செய்வது குறித்து தற்போது முடிவு எடுக்க தேவையில்லை என தீர்மானிக்கப்பட்டது. மேலும், ஒலிம்பிக் போட்டி இரத்தானால் ஜப்பானுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 
ஆகவே, 56 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்து இருக்கும் ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்பதில் ஜப்பான் அரசாங்கமும் எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
 
இதற்கிடையில், ஒலிம்பிக் தொடர் விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் முடிவுக்கு எதிராக, ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
வழக்கமாக ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்பாக ஒலிம்பிக் தீபம் அது பிறந்த நாடான கிரேக்க நாட்டின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்படுவது வழக்கம்.
 
இதன்படி கடந்த 12ஆம் திகதி ஒலிம்பிக் தீபம் ஒலிம்பியாவில் பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்டது. பிறகு ஒலிம்பிக் தீபம் ஒரு வாரம் கிரீஸ் நாட்டில் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம் ஓரிரு நாட்களுடன் நிறுத்தப்பட்டது.
 
இந்த நிலையில் ஒலிம்பிக் தீபத்தை பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானில் இருந்து ‘டோக்கியோ 2020’ என்ற பெயருடன் சிறப்பு விமானம் நேற்று கிரேக்க நாட்டுக்கு சென்றது. இதன் பின்னர் ஒலிம்பிக் தீபம் டோக்கியோ நகருக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
 
32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை, ஜப்பானின் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
உலகின் மிகப் பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கு ஜப்பான் கடந்த இரண்டு வருடங்களாக, பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
 
குறிப்பாக அரசின் பெருமளவான நிதியினால் கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கப்பட்டு வந்த பிரமாண்ட விளையாட்டு அரங்குகள் தற்போது போட்டிகளை நடத்த தயாராகவுள்ளது.
 
குறித்த கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், வெப்பத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரங்கத்தின் கூரைகள் மரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் பார்வையாளர்கள் மற்றும் வீரர்களை குளிர்சியாக வைத்திருக்க முடியுமென வடிவமைப்பாளர்கள் நம்புகின்றனர்.
 
குறித்த கோடைக்கால ஒலிப்பிக் தொடரில், பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முகத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணும் முறைமையை போட்டி அமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தவுள்ளனர்.
 
206 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில், 33 விளையாட்டுகளில் இருந்து 339 விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் 11,091 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
அத்தோடு, இந்த ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், கோடைக்கால ஒலிம்பிக் தொடரில், 7 புதிய விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தவுள்ளன. இதனை சர்வதேச ஒலிம்பிக் குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.
 
அதேபோல, கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது
 
டோக்கியோவில் உள்ள புதிய தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில், 22 விளையாட்டுக்களில் இருந்து 540 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES