Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

வேலைவாய்ப்பு (PAU-64000)

அழகுக் கலை நிபுணர் தேவை

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

அழகு கலை நிபுணர் தேவை

Paris (75011) அல்லது Les pavillons Sous Bois (93320) இல் உள்ள Indian Beauty Parlourக்கு அழகு கலை நிபுணர் (Beautician Estheticienne) தேவை
click to call 07 81 83 45 67

வேலையாள்த் தேவை

புதிய வகுப்புகள்

ஊழியர்கள் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

கணனி வகுப்புக்கள்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
15
செவ்வாய்க்கிழமை
அக்டோபர்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

தமிழகம் முழுவதும் 20-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

18 September, 2019, Wed 4:29   |  views: 500

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமித்ஷா கருத்து

தி.மு.க. மகிழ்ச்சிக் கடலில் நீந்தி மனம் மயங்கிடும் இயக்கமல்ல, மக்களின் நலன் காக்கும் அறப்போர்க் களத்தில் எப்போதும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்த இயக்கம்.

பெரியார் பிறந்தநாளில் பிறந்த தி.மு.க.வுக்கு இன்று 70-ம் அகவை. அகம் மகிழ்ந்து கொண்டாட வாருங்கள் என உங்களில் ஒருவனான நான் அழைக்கவில்லை. அறப்போர்க்களம் காண வாருங்கள் என்றுதான் அழைக்கிறேன். அன்னைத் தமிழைக் காப்பதுதான் நமக்கு பெருமகிழ்ச்சி. அதற்கான போராட்டமே நமக்கு திருவிழா. அத்தகைய திருவிழாவை நாம் கொண்டாடவில்லை. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ‘இந்தி திவாஸ்’ என்கிற இந்தி நாளினையொட்டி தெரிவித்த கருத்துதான் நம்மை கிளர்ச்சி கொள்ள வைத்திருக்கிறது.

தமிழ் மீது ஆதிக்கமா?

“இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழிதான் இருக்க வேண்டும். இந்திதான் அந்த அடையாளத்தைக் கொடுக்கும்” என்று மத்திய உள்துறை மந்திரி பேசியிருப்பது, இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கக் கூடியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகள் பேசுவோரை இரண்டாம் தர குடிமக்களாக்குவது. வேற்றுமையில் ஒற்றுமை என்கிற இந்தியாவின் அடையாளத்தைத் தகர்த்து, நாட்டின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கக்கூடியது. இந்தி என்கிற ஆதிக்க அணுகுண்டு கொண்டு, ஒன்றுபட்ட இந்தியாவுக்கு ஆபத்தை உருவாக்கிவிடாதீர்கள் என்பதுதான் நமது கோரிக்கை.

நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. அதே நேரத்தில் எந்த மொழியும் நம் உயிருக்கும் மேலான தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்குமேயானால், அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பவர்களுமல்ல.

ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தியை நிலைநாட்ட பா.ஜ.க. அரசு துடிப்பது பாசிசத்தனத்தின் வெளிப்பாடாகும். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் இந்த கொள்கைகளை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டும் என்பதை உணர்ந்த இயக்கம், தி.மு.க., தமிழுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாத மக்களின் தாய்மொழிகளுக்கும் ஆபத்தை உருவாக்குகின்ற இந்த கொடூரத்தை எதிர்த்து நிற்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

அதனால்தான், இம்மாதம் 16-ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில், மத்திய அரசின் இந்தி திணிப்பையும், ஒரே தேசம் - ஒரே மொழி - ஒரே ரேஷன் ஆகியவற்றை எதிர்த்தும் தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உணர்வுமிக்க தமிழர்கள்

தமிழ்நாட்டின் வருவாய் மாவட்ட தலைநகரங்கள் அனைத்திலும் செப்டம்பர் 20-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். அதுபோலவே ஒவ்வொரு வருவாய் மாவட்ட தலை நகர்களிலும் எழுச்சிமிகு போராட்டத்தை அந்தந்த வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் நடத்துகின்றனர்.

மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர- பேரூர்- பகுதி- வட்ட- ஊராட்சி உள்ளிட்ட கிளைக் கழக நிர்வாகிகளும், துணை அமைப்புகளான அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக பங்கேற்பதுடன், இது தமிழ் காக்கும் போராட்டம் என்பதால் தங்கள் பகுதியில் உள்ள உணர்வுமிக்க தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல்’

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சுயமரியாதை - பகுத்தறிவு - சமூகநீதி - மொழியுரிமை - இன உணர்ச்சி ஆகிய ஐந்தின் விதைநெல்லாம் பெரியாரின் பிறந்தநாள். தத்துவமாய் எங்களை இயக்கும் உங்கள் சொற்களையே ஆயுதங்களாக கொண்டே போராடுகிறோம். பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல். வெல்வோம். வாழ்க பெரியார்.

இருள் நீக்கி ஒளிகொடுத்த இயக்கமாம் தி.மு.க. பிறந்த நாள் இன்று (நேற்று). இனம் - மொழி - நாடு காக்க நாம் நடத்திய போராட்டங்கள், பெற்ற வெற்றிகள், ஆட்சிப்பொறுப்பேற்று செய்த சாதனைகள் அதிகம் என்றாலும் அண்ணாவையும், கருணாநிதியையும் வணங்கி நம் பயணத்தைத் தொடர்வோம். வாழ்க தி.மு.க., வெல்க தமிழ்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

appartement neuf Clichy ( offres exceptionnelles )
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf à Drancy ( Frais de notaire offerts )
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf la Courneuve
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf au Blanc Mesnil
4000 M2 €
Paristamil Annonce
Appartement type F3 à Bondy
152 000 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26