Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

ஹர்பஜன் சிங்கின் ஆசை கலைந்து போனது!

9 October, 2019, Wed 7:38   |  views: 1033

இங்கிலாந்தில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு, இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
த ஹண்ட்ரட் (the hundred) கிரிக்கெட் தொடருக்கான வரைவுப் பட்டியலில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், அண்மையில் பதிவு செய்திருந்தார்.
 
இத்தொடரில் விளையாடுவதற்கு ஆர்வம் கொண்டிருந்த ஹர்பஜன் சிங், தன்னுடைய அடிப்படை விலையாக 1 லட்சம் பவுண்ஸ்களையும் நிர்ணயம் செய்திருந்தார்.
 
ஆனால், இத்தொடரில் விளையாடுவதற்கு ஹர்பஜன் சிங், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் அனுமதி பெறவேண்டும்.
 
எனினும், விதிமுறைப்படி, ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே வெளிநாட்டுப் போட்டிகளில் விளையாட முடியும். ஆனால் இதுவரை தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிடாத 39 வயதான ஹர்பஜன் சிங், அடுத்தவருடம் ஐ.பி.எல். தொடருக்கு பின்னர் ஓய்வு அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகின்றது.
 
ஆகவே ஹர்பஜன் சிங், எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள த ஹண்ட்ரட் (the hundred) கிரிக்கெட் தொடரில், விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு என கூறப்படுகின்றது.
 
இத்தொடரில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு வீரர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படும் என அண்மையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்திருந்த நிலையில், இதில் முன்னணி வீரர்களான கிறிஸ் கெய்ல், ரஷித் கான், டேவிட் வோர்னர், ஆரோன் பிஞ்ச், பாபர் அசாம் உள்ளிட்ட 165 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
 
லண்டனில் ஒக்டோபர் 20ஆம் திகதி இறுதி வரைவுப் பட்டியல் வெளியிடப்படும். ஒவ்வொரு அணியிலும் 3 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100 பந்துகள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடருக்கு த ஹன்ரட் (வுhந ர்ரனெசநன) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 
ஆண்கள் மற்றும் பெண்கள் என பங்கேற்கும் இத்தொடர், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில், இங்கிலாந்தின் பிராந்தியங்களைச் சேர்ந்த எட்டு அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.
 
இந்த ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் 10 பந்துகள் கொண்ட ஒரு ஓவரும் வீசப்படும் என முன்னர் கூறப்பட்ட போதும் இந்த ஆண்டு அதில் சில மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.
 
அந்தவகையில் இந்த கிரிக்கெட் தொடரில் 10 பந்துகள் கொண்ட 10 ஓவர்கள் வீசப்படவுள்ளதோடு, குறிப்பிட்ட ஒவ்வொரு ஓவரினதும் 10 பந்துகளையோ அல்லது 5 பந்துகளையோ பந்துவீச்சாளர் ஒருவருக்கு வீச முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுதவிர, இந்த கிரிக்கெட் தொடரில் இன்னும் சில புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தவுள்ளது. இத்தொடர் நெருங்கும் போது இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது. இத்தொடர் எதிர்வரும் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்