பிரெஞ்சு இராணுவத்தினரின் மிகப்பெரும் எரிபொருள் சேமிப்பகத்துக்கு அருகே பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயினை அணைக்கும் தீவிர முயற்சியில் தீயணைப்புபடையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
Var மாவட்டத்தின் Saint-Mandrier நகரில் உள்ள எரிபொருள் காப்பகத்துக்கு அருகே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை 25 ஹெக்டேயர்கள் நிலப்பரப்பு எரிந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
50 கி.மீ வேகத்துக்கும் குறைவாக காற்று வீசுவதால் பெருமளவில் ஆபத்து இல்லை என்றபோதும், இராணுவத்தினரின் எரிபொருள் கிடங்கில் தீ பரவ வாய்ப்பிருக்கும் காரணமாக தீயணைப்பு படையினர் வேகமாக தீயினை அணைக்க போராடி வருகின்றனர்.