உதைப்பந்தாட்ட பயிற்சியின் போது 13 தொடக்கம் 15 வரையான வயதுடைய சிறுவர்கள் மின்னல் தாக்குலுக்கு இலக்காகியுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பா-து-கலேயின் Saint-Nicolas-lez-Arras இல் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. 18:30 மணி அளவில் இங்குள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் உதைப்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறுவர்களே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். மொத்தமாக 24 மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள Lille University Hospital மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறுவர்களில் சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இரண்டு சிறுவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 சிறுவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியதாகவும், ஆனால் ஆபத்து நிலையை கடந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.