Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

தென்னாபிரிக்கா மண்ணில் சாதனை வெற்றியை பதவி செய்த இலங்கை அணி!

23 February, 2019, Sat 11:16   |  views: 930

தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை கிரிக்கெட் அணி, சரித்திர வெற்றியினை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் இந்த வெற்றியை இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இலங்கை அணி முழுமையாக கைப்பற்றியதன் மூலம் இந்த வரலாற்று வெற்றியினை இலங்கை அணி பதிவு செய்துள்ளது.
 
இந்த வெற்றியின் மூலம், தென்னாபிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற மகத்தான பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.
 
இத்தொடரில் இதற்கு முன்னதாக டர்பனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், குசல் ஜனித் பெரேராவின் அபார துடுப்பாட்டத்தின் துணையுடன் இலங்கை அணி 1 விக்கெட்டினால் திரில் வெற்றியை பதிவுசெய்தது.
 
இதனையடுத்து, வரலாற்று வெற்றியின் ஏக்கத்துடன் கடந்த 21ஆம் திகதி பேர்ட் எலிசெபத் மைதானத்தில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி களமிறங்கியது.
 
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
இதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக குயிண்டன் டி கொக் 86 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் அதிகபட்சமாக விஸ்வ பெர்னான்டோ மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
இதனைதொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, வெறும் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது.
 
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக நிரோஷன் டிக்வெல்ல 42 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் அதிகபட்சமாக கார்கிஜோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், ஒலிவியர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
68 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 128 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இலங்கை அணிக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
 
இதில் தென்னாபிரிக்கா அணி சார்பில், அணித்தலைவர் டு பிளெஸிஸ் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அதிகபட்சமாக சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளையும், தனஞ்சய டி சில்வா 3 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
இதனையடுத்து, 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, குசல் மெண்டிஸ் மற்றும் ஒசே பெர்னான்டோவின் 163 ஓட்டங்கள் இணைப்பட்டத்தின் துணையுடன் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
 
இதனால் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் மகத்தான வெற்றியை பெற்றதோடு, தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வைத்து வயிட் வோஷ் செய்து வரலாற்று வெற்றியை முத்திரை பதித்தது.
 
இதன்போது இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக குசல் மெண்ஸ் ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களையும், ஒசேடா பெர்னான்டோ 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் கார்கிஸோ ரபாடா மற்றும் ஒலிவியர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்