Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
23
செவ்வாய்க்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: பிரதமை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கோபுரத்துக்கிளி...!!!

22 March, 2019, Fri 13:56   |  views: 1007

தஞ்சாவூர் எல்லோருக்கும் தெரியுமில்லையா? அங்கு பிரஹதீசுவரர் ஆலயம் உள்ளதும் உங்களுக்கத் தெரியும். அந்த கோபுரத்தையும் தெரியும்.தஞ்சாவூர் முன்பெல்லாம் தனி ராஜ்ஜியமாக இருந்தது.
 
அதை ஒரு ராஜா திறம்பட ஆண்டுகொண்டிருந்தார். ராஜா,மந்திரிகள்,பிரதானிகள் புடைசூழ,தினமும் சாயங்காலம் ஸ்வாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருவார்.
 
அந்தக் கோவில்  கோபுரத்தில்  ஒரு கிளி வசித்துக் கொண்டு வந்தது. அதற்கு நன்றாகப் பேசவும் தெரியும். சுபாவத்திலேயே நல்ல குணமுள்ள கிளி. ராஜா வருவதை தினமும் வேடிக்கை பார்க்கும் அக்கிளி. ராஜாவுடன் அதற்குப் பேசவேண்டுமென்று  மிகவும் ஆசை.
 
அம்மாதிரி வேடிக்கைப் பார்க்கும் போது ,தரையிலிருந்து ஒரு தங்கக் காசு கிடைத்தது  அந்தக் கிளிக்கு. மிகவும் பெருமையாகவும் இருந்தது . தஞ்சைக் கோபுரம் உதவி—கூகல்—நன்றி ராஜா அன்று கோவிலுக்கு வரும்போது, கிளி சொல்லத் துவங்கியது.
 
தஞ்சாவூர் ராஜாவே, என் தங்கமானராஜாவே தரையிலிருந்து எனக்கொரு தங்கக் காசு கிடைத்ததே , தரையிலிருந்து எனக்கொரு தங்கக் காசு கிடைத்ததே என்று இதையே பலமுறைகூறி குதித்து,கும்மாளமிட்டு அதன் ஸந்தோஷத்தைத் தெரிவித்தது.
 
ராஜா நிமிர்ந்து பார்க்கிறார். திரும்பவும் கும்மாளமாகப்  பேசுகிறது. ராஜாவுக்குத் திடீரென்று கோபம் வந்து விட்டது. ஒரு தங்கக் காசுக்காகப் பீற்றிக் கொள்கிறது. சேவகா நீ போய் அந்தத் தங்கக் காசைப் பிடுங்கி வா என்று உத்தரவிட்டார்.
 
சேவகன் கோபுரத்தின் மேலேறி காசைப் பிடுங்கிக் கொண்டு வந்து விடுகிறான். வழக்கம்போல ராஜா மறுநாள் கோவிலுக்கு உலா வருகிறார். கிளி நோக்குகிறது.
 
தஞ்சாவூர் ராஜாவே,  தொடர்ந்து மிகுதி வரிகளையும் சொல்லி முடித்து தரையிலிருந்து கிடைத்த தங்கக் காசை வாங்கிக் கொண்ட ராஜாவே, என குதித்துக்  கும்மாளமிட்டு திரும்பத்,திரும்ப இதையே சொல்கிரது.
 
ராஜா சற்று யோசிக்கக் கூடாதா? இல்லை. சேவகா நீ போய் அந்தப் பெருமைக்கார கிளியின் தலையில் ஓங்கி ஒரு குட்டு குட்டி விட்டுவா என்று உத்தரவிட்டார்.
 
சேவகனும் மளமளவென்று மேலேறிக் கிளியைப் பிடிக்கிறான். அதன் தலையில் ஓங்கி ஒரு குட்டு குட்டுகிறான். தலையில் ரத்தம் வழிகிறது.  ராஜா கண்டு கொள்ளாமலேயே போய்விடுகிறார். மறுநாளும் வழக்கம் போல ராஜா  கோவிலுக்கு உலா வருகிரார்.
 
கிளி பார்த்துக் கொண்டே இருந்தது. இராஜாவின் அருகில் வந்தது. சொல்லத் துவங்கியது. தஞ்சாவூர் ராஜாவே,என் தங்கமான ராஜாவே, தரையில் கிடைத்த காசை வாங்கிக் கொண்ட ராஜாவே,
 
தலைக்கு ஒரு அழகான சிவப்பு நிற பட்டுக்குல்லா தைத்துத்தந்த என் தங்கமான ராஜாவே, என் தங்கமான ராஜாவே, என்று கூறிக் கும்மாளமிட்டுக் குதித்துக் கூத்தாடியது. இராஜா  கூர்ந்து கவனிக்கிறார். என்ன இது, என்ன சொல்கிறது? நேற்று வழிந்த ரத்தத்தைப்,பட்டுக்குல்லா வென்று சொல்லிக் கூத்தாடுகிறது.
 
ராஜாவிற்கு  மனது இளகிவிட்டது. இவ்வளவு நல்ல மனமா?; சேவகா நிதானமாக அந்தக் கிளியைப் பிடித்து வா என்று உத்தரவிட்டார். சேவகனும் செய்கிறான். கிளிக்கோ ஸந்தோஷம் பிடிபடவில்லை. பெருமை பொங்க ராஜாாவைப் பார்க்கிறது. இந்தக் கிளியை நம் அரண்மனைக்கு அழைத்துப் போவோம்.
 
காயம் ஆறும் வரையில்  வைத்தியம் செய்து மருந்து போடுவோம். பாலும், பழமும்,  கொட்டைகளுமாகக் கொடுப்போம் என்றார்.
 
எந்த ஒரு விஷயத்தையும் நல்ல முறையிலேயே எடுத்துக் கொள்ளும்
 
இந்தக் கிளிதான் எவ்வளவு பெருந்தன்மை கொண்டது? அரண் மனையிலேயே ஒரு கூண்டில் வைத்து கிளிக்கு வைத்தியமும் போஷாக்கும் ராஜா தருகிரார்.
 
அந்தக்கிளி காயம் ஆறி , முன்பைவிடத் தெம்புடன்  இருந்தது. ராஜா அன்புடன் அந்தக்கிளியை பாசமுடன் தடவிக்கொடுத்து, கூண்டைத்திறந்து பறக்கவிட்டு அன்புடன் வழியனுப்புகிறார். திரும்பவும் இப்போது ராஜா கோவிலுக்குப் போகும் போதெல்லாம் தஞ்சாவூர்ராஜாவே,என் தங்கமாந ராஜாவே பாலும்,பழமும், பரிந்தளித்த ராஜாவே, நீ வாழ்க, நீ வாழ்க என்று ஆனந்தக் கூத்தாடுகிறது. எவ்வளவு நல்ல  கிளி? ராஜாவையே மாற்றி விட்டது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26