எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரான்சில் அதிகம் பார்வையிடப்படும் 10 இணையத்தளங்கள்!!

பிரான்சில் அதிகம் பார்வையிடப்படும் 10 இணையத்தளங்கள்!!

9 February, 2017, Thu 11:30   |  views: 17620

பிரெஞ்சு மக்களால் அதிகம் பார்வையிடப்படும் சிறந்த 10 இணையத்தளங்கள் குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்!! 

 
முதலாவது இடத்தில் Google.fr இணையத்தளம் உள்ளது. தேடல் இயந்திரமான கூகுள் பல நாடுகளில் முதலாவது இடத்தில் உள்ளது. அதே போல் பிரான்சிலும் இதுவே முதலிடம். சுற்றுலாப்பயணிகளுக்கு பெரிதும் உதவுகிறது இந்த இணையம்!!
 
இரண்டாவது இடத்தில்..?? அதே தான்... ஃபேஸ்புக்!! சமூகவலைத்தளத்தின் ராஜா!! அரட்டைகள் முதல் அரசியல் வரை, ரொனால்டோ முதல் டொனால்ட் ட்ரம்ப் வரை தினம் ஒரு விஷயம் 'ட்ரெண்ட்' ஆகிக்கொண்டே உள்ளது பிரெஞ்சு ஃபேஸ்புக்கில்!!
 
மூன்றாவது இடத்தில், Google.com. மீண்டும் தேடுதல் இயந்திரம். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்... குறிப்பாக பிரித்தானியர்கள் அதிகம் இந்த இணையத்தை பயன்படுத்துகிறார்களாம். 
 
நான்காவது இடத்தில், YouTube.com!! ஐந்தாவது இடத்தில் இணைய விற்பனையாளர்களான  leboncoin.fr இருக்கிறது. ஆறாவது இடத்தில் Amazon.fr!! இந்த இரு இணையத்தளங்களுக்கும் போட்டா போட்டி!! விற்பனையை அதிகரிக்கும் போட்டி தான்... வேறென்ன..?
 
தொலைத்தொடர்பு வழங்கிகளான Orange.fr ஏழாவது இடத்திலும், Yahoo.com எட்டாவது இடத்திலும், Live.com ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. தகவல் திரட்டியான Wikipedia.org பத்தாவது இடத்தில் உள்ளது. 
 
இவைதான் முதல் 10 தளங்கள்!! இது தவிர, டுவிட்டர் இணையத்தளம் 12 வது இடத்திலும், இன்ஸ்டாகிராம் 14 வது இடத்திலும் உள்ளன. 
 
வேலை இல்லாதோர் பதிவு செய்யும் இணையத்தளமான  pole-emploi.fr, 36.0 மில்லியன் பார்வையாளர்களுடன் 19 ஆவது இடத்தில் உள்ளது. 
 
மற்றுமொரு ஆச்சரியமான விஷயம் சொல்கிறோம்... தரவரிசையில் முதலாவது இடத்தில் இருக்கும் Google.fr இணையத்தளத்தை தினமும் 1.9 பில்லியன் (கவனிக்க... பில்லியன்) மக்கள் பார்வையிடுகிறார்கள்!! இந்த இணையத்தை பார்வையிட சராசரியாக ஒருவர் 11 நிமிடங்களும் 28 செக்கண்ட்களும் செலவு செய்கிறாராம்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18