எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஒஸ்கார் விருதும், பிரஞ்சு சினிமாவும்

ஒஸ்கார் விருதும், பிரஞ்சு சினிமாவும்

25 March, 2016, Fri 8:00   |  views: 17106

சிறந்த சினிமா படைப்பு, கலைஞர்களுக்கான அகாடமி விருது (ஒஸ்கார்)  வருடா வருடம் நடைபெற்று வருகிறது. இதன் முதல் விருது நடிகர் Douglas Fairbanks (அமெரிக்கா) இற்கு வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட ஆண்டு 1929.

 

முதலாவது ஒஸ்கார் விருது (1929 ஆம் ஆண்டு)  வழங்கும் நிகழ்விலேயே பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த Maurice Chevalier இற்கு சிறந்த நடிகர் விருது The Big Pond திரைப்படத்திற்காக  பரிந்துரைக்கப்பட்டது.  ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. தொடந்து அடுத்த வருடம் (1930) The Love parade திரைப்படத்திற்காகவும் இவர் பரிந்துரைக்கப்பட்டார் அப்போதும் விருது கிடைக்கவில்லை. முதன் முதலாக ஒஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட பிரெஞ்சு கலைஞர் என்ற பெருமை அவருக்கு கிட்டியது! மேற்படி இரண்டு திரைப்படங்களும் அமெரிக்க திரைப்படங்களாகும்.

 

சாமுவேல் ஹோப்பிங்ஸ் ஆடம்ஸ் எழுதிய  Night Bus நாவலை தழுவி 1934 ஆம் ஆண்டு It Happened One Night எனும் அமெரிக்க திரைப்படம் வெளியாகியது. இதில் நாயகியாக நடித்திருந்த பிரெஞ்சு நடிகையான Claudette Colbert இற்கு சிறந்த நடிகைக்காக ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. பிரெஞ்சு கலைஞர்களில் முதல் ஒஸ்கார் விருது வாங்கியவர் என்ற பெருமையும் வந்து சேர்ந்துகொண்டது !!

 

தொடந்து அடுத்த வருடமும் (1935) Claudette Colbert, 'Private Worlds' திரைப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் இந்த முறை விருது வேறொருவருக்கு சென்றது!

 

நடிகை Simone Signoret ஐ அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது. பல வருடங்களாக பலருக்கு கனவு கன்னியாக திகழ்ந்தவர். ப்ரெஞ்சு தேசத்தை சேர்ந்த இவருக்கு 1959ல் 'Room at the Top' திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருது கிடைத்தது. இரண்டாவது ஒஸ்கார் பெற்ற கலைஞராக இவர் இருக்கிறார்.

 

இதற்கிடையில் ஆண்கள் தரப்பில் ஒஸ்கார் வாங்க பெரும் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பல தடவைகள் பரிந்துரைக்கப்பட்ட போதும் ஒஸ்கார் விருது குதிரை கொம்பாய் போனது. 1929 ல் தொடங்கிய இந்த புரட்சி போராட்டத்திற்கு இயக்குனர் Michel Hazanavicius, 2011ல் ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

2011ம் ஆண்டு Warner Bros, The Weinstein Company ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்க,  இயக்குனர் Michel Hazanavicius 'The Artist' எனும் திரைப்படத்தை இயக்கினார்.

 

The Artist திரைப்படம் ஒரு கருப்பு வெள்ளை திரைப்படமாகும். இந்த படத்தில் வசனங்கள் இல்லை.. பின்னனி இசை மாத்திரமே! இப்படியாக 15 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு தயாரானது இந்த The Artist.

 

2011ம் ஆண்டு ஒஸ்கார் மேடையில் அந்த வருடத்திற்கான விருதுகள் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. அதில் சிறந்த திரைப்படத்திற்கான விருது, சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது, சிறந்த இயக்குனருக்கான விருது, சிறந்த பின்னனி இசைக்கான விருது என மொத்தம் ஐந்து விருதுகளை The Artist திரைப்படம் பெற்றுக்கொண்டது. மொத்தமாக 10 விருதுகளுக்கு படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

 

பிரெஞ்சு தேசமே ஆரவாரப்பட்டு ஆர்ப்பரித்தது. ஒரு பிரெஞ்சு சினிமா ஒஸ்காரில் இத்தனை விருதுகளை பெற்றுக்கொண்டது இதுவே முதன் முறை..!

 

சொல்ல மறந்திட்டோமே.. 15 மில்லியன் அமெரிக்க டொலர்களில் தயாரான இத்திரைப்படம் 133 மில்லியன் டொலர்கள் வசூலித்திருந்தது!!

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18