இன்று அதிகாலை ஒபேவில்லியேவில் ஒரு கொண்டாட்டம் கொலைக்களமாகி உள்ளது. தன்னை விருந்திற்கு அழைத்தவர் மீது ஒரு நபர் தப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், அவர் அந்த இடத்திலேயே பலியாகி உள்ளார். இவர் சுட்ட குண்டு, விருந்திற்கழைத்தவரின், கழுத்தைத் துளைத்துச் சென்றுள்ளது. சுட்ட நபர் அந்த இடத்திலிருந்து தப்பியோடி உள்ளார். இவர் காவற்துறையினரால் தீவரமாகத் தேடப்பட்டுவரகின்றார்.
இந்த விருந்திற்கு அழைத்தவர், தான் அழைத்த தனது நான்கு நண்பர்களிடம், தான் வைத்திருந்த துப்பாக்கி ஒன்றைக் காட்டி உள்ளார். அதை ஒவ்வொருவராக, ஒவ்வொரு விதமாகக் கையாண்டு வந்துள்ளனர். அதனைக் குறிப்பிட்ட நபர் கையாண்ட போது அது வெடித்ததில், விருந்துக்கு அழைத்தவர், பலியாகி உள்ளார்.
அங்கு வந்திருந்த, நால்வரில் இருவரான, ஒரு தம்பதியினரும், துப்பாக்கியால் சுட்டவரும், உடனடியாக அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இந்தத் தம்பதியினர் சிலமணி நேரத்தில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்காவதாக நின்ற நபரே, அவசர முதலுதவிப் படையினர்க்கும் காவற்துறையனர்க்கும் தகவல் தெரிவித்துள்ளார். இவர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆபத்திலிருந்தவரைக் கைவிட்டுச் சென்ற தம்பதியினர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சுட்டவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.