எழுத்துரு விளம்பரம் - Text Pub |
1 December, 2022, Thu 15:33 | views: 6703
இன்று வியாழக்கிழமை காலை RER C தொடருந்து சேவைத் தடையைச் சந்தித்தது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்களின் பின்னர் மீண்டும் போக்குவரத்து சீரடைந்துள்ளதாக தொடருந்து போக்குவரத்து நிறுவனமான SNCF அறிவித்துள்ளது.
இன்று காலை முதல் Pontoise மற்றும் Avenue Henri-Martin நிலையங்களுக்கிடையே RER C சேவைகள் தடைப்பட்டன. தொடருந்தில் பயணித்த பயணிகள், இரண்டு மணிநேரங்களாக தொடருந்தை விட்டு வெளியேற முடியாமல் உள்ளேயே காத்திருக்க நேர்ந்தது. இறுதியாக இரண்டு மணிநேரம் கழித்து அவர்கள் தொடருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
திருத்தப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு நண்பகல் 12.40 மணி அளவில் சேவைக்குத் திரும்பியது. என்றபோதும் ஏனைய நிலையங்களுக்கிடையே பயணிக்கும் RER C சேவைகள் மிகவும் மெதுவாக இயங்குவதாக அறிய முடிகிறது.
அண்மைய நாட்களில் RER C தொடருந்துகள் பல தடவைகள் சேவைத் தடைகளை சந்தித்துள்ளன. தொடர்ச்சியான இது போன்ற சம்பவங்கள் தங்களை மிகவும் பாதித்துள்ளதாக பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
![]() | அடுத்த ![]() |
|
![]() 🔴 வேலை நிறுத்தம்! - தடைப்பட்ட எரிபொருள் விநியோகம்!7 February, 2023, Tue 9:49 | views: 2612
![]() 🔴 இன்று வேலை நிறுத்தம்! - ஸ்தம்பிக்கும் பிரான்ஸ்!! (முழுமையான போக்குவரத்து விபரங்கள்)7 February, 2023, Tue 6:00 | views: 6653
![]() வீடொன்றில் இருந்து 400,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!6 February, 2023, Mon 20:50 | views: 5370
![]() 🔴 விசேட செய்தி : பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்படுகிறது!!6 February, 2023, Mon 20:18 | views: 10851
![]() ஈஃபிள் கோபுரத்தின் அருகே - இளம் பெண் மீது பாலியல் தாக்குதல்!!6 February, 2023, Mon 19:34 | views: 4568
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |