விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

சட்டவிரோத ஆயுதங்களை அரசிடம் கையளிக்க கோரிக்கை! - நாடு முழுவதும் சேகரிப்பு!!

சட்டவிரோத ஆயுதங்களை அரசிடம் கையளிக்க கோரிக்கை! - நாடு முழுவதும் சேகரிப்பு!!

28 November, 2022, Mon 11:35   |  views: 6931

பிரெஞ்சு மக்களிடம் இருக்கும் சட்டவிரோத ஆயுதங்களை அரசிடம் கையளிக்க உள்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது. சேகரிப்பு பணிகள் ஆரம்பித்த முதல் மூன்று நாட்களில் இதுவரை 21,000 ஆயுதங்களை பிரெஞ்சு மக்கள் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களை சேகரிப்பதற்காக உள்துறை அமைச்சகத்தினால் நாடு முழுவதும் 300 நிலையங்கள் அமைக்கப்பட்டன. காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மேற்படி நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் தங்களிடம் உள்ள சட்டவிரோத மற்றும் அனுமதியுடன் கூடிய அதேவேளை தேவையற்ற ஆயுதங்களை கையளிக்கும் படி கோரப்பட்டிருந்தது. அதையடுத்து துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள், ரைஃபிள்கள், துப்பாக்கி ரவைகள், வெடி மருந்துகள் என பலதரப்பட்ட பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 60,000 இற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மற்றும் 21,000 இற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இவற்றில் வெறும் 5,500 ஆயுதங்கள் மட்டுமே அரசின் தகவல் திரட்டில் பதியப்பட்ட ஆயுதங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வீடுகளில் இருந்து ஆயுதம் சேகரிக்கும் நிலையங்களுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்ல அச்சப்படுவோர், காவல்துறையினரை தொடர்புகொள்ளும் படியும் கோரப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 2, வெள்ளிக்கிழமை வரை ஆயுதங்களை கையளிக்க முடியும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18