எழுத்துரு விளம்பரம் - Text Pub

மீண்டும் பரிசில் கலவரம்! - 81 பேர் கைது!!

மீண்டும் பரிசில் கலவரம்! - 81 பேர் கைது!!

19 March, 2023, Sun 7:54   |  views: 6380

ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் மூன்றாவது நாளாக நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றிருந்தன.

தெற்கு பரிசில் குவிந்த போராட்டக்காரர்கள், பெரும் கலவரத்தில் ஈடுபட்டு, காவல்துறையினர் மீது தாக்குதலும் நடத்தினர். அரசின் செயற்பாடுகளில் நம்பிக்கை இழந்துள்ள மக்கள், காவல்துறையினரின் தடை உத்தரவையும் மீறி வீதிகளில் இறங்கி போராடினர்.

மாலை 6 மணி அளவில் Place d’Italie பகுதியில் ஒன்றிணைய ஆரம்பித்த போராட்டக்காரர்கள், அங்கிருந்து இலக்கின்றி முன்னேறினர்.

காவல்துறையினரால் அனுமதி வழங்கப்படாத போராட்டம் என்பதால், போராட்டக்குழுவினர் இலக்கின்றி வீதிகளுக்குள் நுழைந்தனர்.

13 ஆம் வட்டாரத்தில் இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதன் முடிவில் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு 9.30 மணி அளவில் நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

போராட்டத்தில் 4,000 பேர் வரையானவர்கள் கலந்துகொண்டதாக அறிய முடிகிறது. முன்னதாக போராட்டக்காரர்களால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படக்கூடும் என நேற்று நண்பகல் முதல் சோம்ப்ஸ்-எலிசே மற்றும் கொன்கோட் சதுக்கம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18