விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

மனைவியையும் - 3 வயது மகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!!

மனைவியையும் - 3 வயது மகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!!

24 January, 2023, Tue 17:30   |  views: 8344

நபர் ஒருவர் தனது மனைவியையும், 3 வயதுடைய மகளையும் கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிரான்சின் வடமேற்கு நகரம் ஒன்றில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Saint-Brieuc (Côtes-d'Armor) நகரில் வசிக்கும் நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணி அளவில் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். 22 வயதுடைய அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மூன்று வயதுடைய தனது மகளையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.

அதன் பின்னர், மனைவியின் தாயான 59 வயதுடைய பெண் ஒருவரையும் சுட்டுள்ளார்.

அதன் பின்னர் குறித்த 24 வயதுடைய நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்தடைந்தபோது, வீட்டில் மூவர் பலியாகிக் கிடப்பதும், 59 வயதுடைய பெண் பலத்த காயமடைந்து இரத்தவெள்ளத்தில் கிடப்பதையும் பார்த்துள்ளனர். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேற்படி சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட குழலுடைய வேட்டைத் துப்பாக்கி ஒன்றின் மூலம் இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன.

சம்பவம் தொடர்பில் அப்பகுதி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18