விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

click to view more

வீடு வாடகைக்கு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

Saajana Auto Lavage

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

வேலை வாய்ப்பு

click to view more

FRENCH வகுப்புகள்

click to view more

ANNE ABI AUTO

click to view more

பொதிகை சேவை

click to view more

இணைய சேவை

click to view more

🔴 புதிய மாதம்! - புதிய மாற்றங்கள்!!

1 July, 2022, Fri 10:00   |  views: 14939

இன்று ஜூலை 1 ஆம் திகதி முதல் பிரான்சில் பல்வேறு மாறுதல்கள், சட்டத்திருத்தங்கள் நடைமுறைக்கு வருகிறது. அவற்றினை இச்செய்தியில் தொகுத்துள்ளோம்.
*****
வேலையில்லாதோருக்கான உதவிக் தொகை அதிகரிப்பு!!

வேலையில்லாதோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை (allocation Chômage) இன்று முதல் அதிகரிக்கிறது. இதுவரை நாள் ஒன்றுக்கு €29.56 யூரோக்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் நாள் ஒன்றுக்கு €30.42 யூரோக்கள் வழங்கப்பட உள்ளது. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த உதவித்தொகை அதிகரிக்கப்படுகிறது.

2.1 மில்லியன் பேர் இதனால் பயனடைய உள்ளனர்.
*****

புதிய தரப்படுத்தலுடன் கூடிய தலைக்கவசம்!

மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் இன்று முதல் புதிய தரப்படுத்தலுக்கு உட்பட்ட தலைக்கவசம் அணிய வேண்டும். இதுவரை ÉCE 22.05 எனும் தரப்படுத்தலுக்கு உட்பட்ட தலைக்கவசங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜுலை 1 ஆம் திகதி முதல் ECE 22.06 எனும் தரப்படுத்தலுக்கு உட்பட்ட தலைக்கவசங்களே அனுமதிக்கப்படும்.

இந்த புதிய தரப்படுத்தலானது, தலைக்கவசத்துக்கு மேலதிக உறுதியையும், பாதுகாப்பையும் வழங்குகிறது. இன்று முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகின்ற போதும், வரும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி முதல் இது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 135 யூரோக்கள் குற்றப்பணம் செலுத்த நேரிடும்.

****

பெயரை மாற்றுவது இலகுவானது!

இன்று ஜூலை 1 ஆம் திகதி முதல், உங்களது பெயரின் இறுதிப்பெயரை (Last name) மாற்றுவது மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது. இதுவரையில் மிகவும் சிரமான பணியாக இருந்த இந்த பெயர்மாற்றம், இன்று முதல் இலகுவானதாக மாற்றப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேல் நிரம்பியவர்கள் நேரடியாக நகரசபைக்குச் சென்று ஆவணங்களை சமர்பித்து பெயரினை மாற்றிக்கொள்ளலாம். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர்கள் இருவரது சம்மதத்தையும் பெற்றே பெயரினை மாற்ற முடியும்..
*****

வெப்பமாக்கி பொருத்த தடை!!

வீடுகளின் கூரைகளில் ஒருசில வெப்பமாக்கிகள் (Boilers) அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஜூலை 1 ஆம் திகதியில் இருந்து “300gCO2eq/KWh PCI” எனும் அளவுக்கு மேல் உள்ள அனைத்து வெப்பமாக்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, எரிபொருள் மற்றும் நிலக்கரி போன்றவற்றில் இயங்கும் வெப்பமாக்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமானது, புதிதாக அமைக்க உள்ள வெப்பமாக்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளவற்றை மாற்றத்தேவையில்லை. அதேபோல் உங்களது முந்தைய வெப்பமாக்கிகளை புதிய நிபந்தனைக்கு ஏற்றதுபோல் மாற்ற விரும்பினால் அதற்காக மிக இலகுவாக நிதி உதவியும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றமானது சுற்றுச்சூழல் மாசடைவை கருத்தில் கொண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
*****

வீடு வாடகை விளம்பரங்களில் மாற்றம்!!

வீடு வாடகைக்கு விடுவதற்கான விளம்பரம் செய்பவர்கள் இன்று முதல் சில முக்கிய விடயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும். அதன்படி, குறித்த விளம்பரங்களில் மாத வாடகை, விற்பனைத் தொகை, வாடகை விடுதற்கான காலம் போன்ற விபரங்களை விளம்பரங்களில் குறிப்பிட வேண்டும். அதேபோல், வீடு அமைந்துள்ள பகுதிகளில் அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையையும் குறிப்பிடவேண்டும் எனவும் நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
*****

விளையாட்டுப்பொருட்களில் வாசனைகள் சேர்க்க தடை!!

சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களில் நறுமணம் வீசும் திரவியங்கள் சிலவற்றைச் சேர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. atranol, Chloroatranol மற்றும் methyl Heptin Carbonate போன்ற மூன்று வாசனைத் திரவியங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களில், 55 வகையான வாசனைத் திரவியங்களுக்கு பிரான்சில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் இந்த புதிய மூன்று புதிய வாசனைத் திரவியங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

*****

மின்சார மகிழுந்துக்களுக்கான கொடுப்பனவு!!

மின்சார மகிழுந்துகள் வாங்குபவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் காலத்தை அரசு நீடித்துள்ளது. மின்சார மகிழுந்துகள் வாங்குபவர்களுக்கு அரசு 6,000 யூரோக்கள் வரை உதவித்தொகை வழங்கி வருகிறது. ஜூன் 30 ஆம் திகதி வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜூலை 1 ஆம் திகதி மீண்டும் இந்த திகதி நீடிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இவ்வருட இறுதி வரை இந்த கொடுப்பனவு வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கும்.


 

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 07 82 35 77 55
Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட
Tel. : 01 76 66 06 62
nouvtac-systems-paris-75008
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18