விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு தூதரகம் மீது தாக்குதல்! - கண்ணீர் புகை வீச்சு!!

பிரெஞ்சு தூதரகம் மீது தாக்குதல்! - கண்ணீர் புகை வீச்சு!!

3 October, 2022, Mon 15:00   |  views: 5722

மத்திய ஆப்பிரிக்க நாடான Burkina Faso இல் உள்ள பிரெஞ்சு தூரதரகம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. தூதரகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரான்சை தமது நாட்டை விட்டு வெளியேறும் படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 10 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Ouagadougou நகரில் உள்ள பிரெஞ்சு தூதரகத்துக்கு முன்னால் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் தூதரகம் நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். உடனடியாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேறும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்த, காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி தாக்குதல் நடத்தினர்.

மேற்படி தாக்குதலில், “குறிப்பிடத்தக்க அளவு சேதம் ஏற்பட்டுள்ளது” என பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேற்படி தாக்குதலானது, தொடர்ச்சியாக இடம்பெறும் இரண்டாவது தாக்குதலாகும். முன்னதாக சனிக்கிழமையும் இதுபோன்ற தாக்குதல் ஒன்றை பிரெஞ்சு தூதரகம் சந்தித்திருந்தது.

இது தொடர்பாக பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில், ஆர்ப்பாட்டக்காரர்களை எங்களுக்கு எதிரான மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டனர்.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18