எழுத்துரு விளம்பரம் - Text Pub |
7 December, 2021, Tue 11:30 | views: 19846
Moussaoui இற்கு 14.000 அமெரிக்க டொலர்கள் ஜெர்மனியின் ஹம்பேர்க் நகரில் இருந்து வந்தது. அதுவே அவனது விமான பயிற்சிக்கு உதவியது.
விமான பயிற்சியின் போது அவன் விமானத்தை மேலெழுப்பி பறக்கச் செல்லவும், தரையிறக்கவும் பயிற்சி எடுக்க மறுத்தான். பலத்த அலட்சியமாக இருந்ததாக பின்னாளில் அந்த பயிற்சி மையத்தின் இயக்குனர் FBI இடம் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 16 ஆம் திகதி 2001 ஆம் ஆண்டு Moussaoui அமெரிக்க உளவுத்துறையினரால் கைது செய்யப்பட்டான். குடிவரவு விசாவினை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரிக்கப்பட்டான்.
அவன் கைது செய்யப்படும் போது, அனைத்துமே சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. அவனது பையில் இரண்டு கத்திகள், மடிக்கணனி, சண்டையிடும் போது அணியும் கையுறைகள், ஷின் கார்ட் என அழைக்கப்படும் பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன.
அவனை தொடர்ச்சியாக துருவினார்கள். அவன் கல்வி கற்ற இடம், விமான பயிற்சி செய்த இடம் என அனைத்தையும் ஒன்றும் விடாமல் அலசினார்கள்.
ஆனால் அவன் ஒரு பெரும் சதிகாரன் எனவும், செப்டம்பர் 11 ஆம் திகதி அனைத்து பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியினையும் மாற்றப்போகின்றவன் என எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
*****
இச்சம்பவம் ஒரு பக்கம் இருக்க, செப்டம்பர் 11 அன்று காலை 10 மணிக்கு அடுத்தடுத்து நான்கு விமானங்கள் வந்து இரட்டை கோபுரத்தை தகர்த்தது. இதில் விமானத்தில் பயணித்தவர்கள், கட்டிடத்தில் இருந்தவர்கள், வீதியில் பயணித்தவர்கள் என மொத்தமாக 2,996 பேர் சாவடைந்துள்ளனர். இவர்களில் 19 பேர் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள் ஆவர்.
*****
தாக்குதலை அடுத்து அமெரிக்கா நிலைகுலைந்தது. பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தது டொலர்ஸ் மதிப்பு வீழ்ந்தது. இது ஒரு பக்கம் இருக்க, உளவுத்துறை தனிப்படை அமைத்து தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
*****
விசாரணைகளில் தாக்குதல் நடத்திய 19 பயங்கரவாதிகள் குறித்து தெரியவந்தது. அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒரே நபர், அப்போது கைதியாக இருந்த Moussaoui என தெரியவந்துள்ளது.
****
தாக்குதலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவன் முதலில் தெரிவித்தான். பின்னர் ‘தாக்குதலுக்கு திட்டம் தீட்டி கொடுத்தது நான் தான்.’ என வாக்குமூலம் அளித்தான்.
******
அவனுக்கு ஆறு பிரிவுகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அத்தோடு வாழ்நாள் முழுவதும் பரோல் வழங்க தடை விதிக்கப்பட்டது.
*****
நாட்கள் நகர்ந்தன. இரட்டை கோபுர தாக்குதலுக்கும் Moussaoui இற்கும் நேரடியாக எந்த தொடர்பும் இருப்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்க உளவுத்துறை திணறியது.
****
அமெரிக்க மக்கள் அவனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தெரிவித்தனர்.
****
விமான பயிற்சியின் போது, பயங்கரவாதிகளுடன் உடன் இருந்தது, மர்மமான முறையில் பணம் கிடைத்தது, விமான பயிற்சின் போது சந்தேகத்துக்கிடமான நடவடிக்கையில் ஈடுபட்டது, பல நாடுகளுக்குச் சென்று இரகசிய சந்திப்பை மேற்கொண்டது என அவன் மீது பலத்த குற்றச்சாட்டுக்கள் உள்ளது.
****
செப்டம்பர் 11 தாக்குதலில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே குற்றவாளி Moussaoui ஆவான்.
****
சுபம்!
![]() | அடுத்த ![]() |
|
![]() ஃபிரான்சின் 10 சக்திவாய்ந்த போர் ஆயுதங்கள்!26 June, 2022, Sun 11:17 | views: 36193
![]() முடிந்தால் பிரெஞ்சில் இதைச் சொல்லிப் பாருங்கள்!!13 May, 2022, Fri 13:36 | views: 41955
![]() உலகில் எங்கெல்லாம் பிரெஞ்சு மொழி பயன்படுகின்றது?9 May, 2022, Mon 13:58 | views: 41324
![]() ஃபிரான்சின் குப்பைத் தொட்டி Poubelle மனிதன்!30 April, 2022, Sat 18:57 | views: 53654
![]() நாட்டை விட்டு சென்றாலும் பின் தொடரும் கடிதம்! - தபாலக வசதிகள்!12 January, 2022, Wed 11:41 | views: 48722
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |