எழுத்துரு விளம்பரம் - Text Pub |
6 December, 2021, Mon 11:30 | views: 19686
செப்டம்பர் 11 தாக்குதலை உலகில் எவருமே மறந்திருக்க முடியாது. அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் அல்-கொய்தா அமைப்பினரால் தகர்க்கப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் தொடர்புடையதாக ஒருவன் மாத்திரமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இன்றுவரை உயிருடன் இருக்கும் குறித்த குற்றவாளி ஒரு பிரெஞ்சு நபர் ஆவான். இன்றைய பிரெஞ்சு புதினம் அவன் குறித்தே.
*****
தாயார் Aicha el-Wafi தனது 14 ஆவது வயதில் மொராக்கோ நாட்டில், முன் எப்போதும் அறிந்திராத ஒருவரை திருமணம் செய்துகொண்டார். ஐந்து வருடங்கள் கழித்து அவர்கள் பிரான்சுக்கு குடிவந்தனர்.
பின்னர் சில வருடங்களில், குடும்ப வன்முறை காரணமாக இருவரும் பிரிந்தனர். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். தாயாருடன் வசித்தனர். நாளாந்தம் வேலை பார்த்து பிள்ளைகளை வளர்த்து வந்தார்.
அந்த நான்கு பிள்ளைகளில் ஒருவன் தான் மேற்படி செப்டம்பர் 11 தாக்குதலின் சூத்திரதாரி Zacarias Moussaoui. அவன் Saint-Jean-de-Luz நகரில் 1968 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி பிறந்தான்.
வளர்ந்து பெரியவனானதும் இலண்டனின் South bank University இல் வங்கி மேலான்மை கல்வி பயின்றான். அதை முடித்துக்கொண்டு அவன் பிரான்சுக்கு திரும்பிய போது, பிரெஞ்சு அதிகாரிகள் அனை பின் தொடர்ந்தனர். அவன் இலண்டனில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகம் கொண்டு அவனை கண்காணித்தனர்.
ஏனென்றால்.. அவன் இலண்டனில் இருந்துகொண்டே ஆஃப்கானிஸ்தான் சென்று வந்திருந்தான்.
1996 இல் இருந்து தொடர்ச்சியாக இலண்டன், பிரான்ஸ், ஆஃப்கானிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளுக்கு பயணித்தான்.
Zacarias Moussaoui 2001 ஆம் ஆண்டின் பெப்ரவரி 26 ஆம் திகதியில் இருந்து மே 29 ஆம் திகதிவரை விமானி பயிற்சியினை Oklahoma நாட்டில் மேற்கொண்டான். 57 மணிநேர வகுப்பினை அவன் கற்றிருந்தான்.
ஆனால் அந்த வகுப்பில் அவன் தோல்வியடைந்து எவ்வித சான்றிதழ்களையும் பெறாமல் வகுப்பில் இருந்து வெளியேறினான்.
அதே வகுப்பில் அதே காலத்தில் மேலும் சில ‘மர்ம’ நபர்களும் ஒருவரை ஒருவர் தெரியாதவாறு அதே பயிற்சியில் ஈடுபட்டனர்.
அந்த மர்ம நபர்கள் தான் சில நாட்கள் கழித்து, அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் வடக்கும் மற்றும் தெற்கு பகுதிகளில் விமானத்தை கொண்டு மோதினார்கள்.
(நாளை…)
![]() | அடுத்த ![]() |
|
![]() ஃபிரான்சின் 10 சக்திவாய்ந்த போர் ஆயுதங்கள்!26 June, 2022, Sun 11:17 | views: 36199
![]() முடிந்தால் பிரெஞ்சில் இதைச் சொல்லிப் பாருங்கள்!!13 May, 2022, Fri 13:36 | views: 41961
![]() உலகில் எங்கெல்லாம் பிரெஞ்சு மொழி பயன்படுகின்றது?9 May, 2022, Mon 13:58 | views: 41330
![]() ஃபிரான்சின் குப்பைத் தொட்டி Poubelle மனிதன்!30 April, 2022, Sat 18:57 | views: 53663
![]() நாட்டை விட்டு சென்றாலும் பின் தொடரும் கடிதம்! - தபாலக வசதிகள்!12 January, 2022, Wed 11:41 | views: 48728
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |