எழுத்துரு விளம்பரம் - Text Pub |
24 November, 2021, Wed 10:30 | views: 19371
ஈஃபிள் கோபுரத்துக்கு திருமணமாகி தற்போது 14 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. என்ன தலை சுற்றுகிறதா..? அட. உண்மையை தான் சொல்கின்றோம்.
Paraphilias என ஒரு வகை பழக்கமுடையவர்கள் உள்ளனர். அவர்களுக்கு மனிதர்கள் மீது காதல் வருவதற்கு பதிலாக, உயிரற்ற பொருட்கள் மீது காதல் வரும். சிலைகள், கட்டிடங்கள், கோபுரங்கள் மீது இந்த காதல் தோன்றி அதன் மீது ‘பைத்தியமாக’ இருப்பார்கள்.
அப்படி ஒரு பழக்கமுடையவர் தான் அமெரிக்காவின் இராணுவ வீரர் Erika laBrie எனும் பெண்மணி. இவர் அமெரிக்காவின் ‘விமானப்படையில்’ பணி புரிகின்றார்.
இவருக்கு திடீரென ஈஃபிள் கோபுரத்தின் மீது காதல் எழுந்தது. முதன் முதலாக 2004 ஆம் ஆண்டு ஈஃபிள் கோபுரத்துக்கு வருகை வந்த போதே அவருக்கு ஈஃபிளுடன் காதல் மலர்ந்தது.
பின்னர் விடாப்பிடியாக நின்று 2007 ஆம் ஆண்டு ஈஃபிள் கோபுரத்தை திருமணம் செய்துகொண்டார். தற்போது திருமணமாகி 14 வருடங்கள் ஆகின்றது.
உலகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. திருமணம் செய்துகொண்டதோடு அவரது பெயரை Erika Eiffel என மாற்றிக்கொண்டார்.
பின்னாநாட்களில் அவர் ஈஃபிள் கோபுரத்தின் மீது காதல் ஏற்பட்ட கதையை புத்தகமாக எழுதினார்.
எத்தனை விசித்திரமானவர்கள் உள்ளனர் இந்த உலகில்..??1!
![]() | அடுத்த ![]() |
|
![]() ஃபிரான்சின் 10 சக்திவாய்ந்த போர் ஆயுதங்கள்!26 June, 2022, Sun 11:17 | views: 36190
![]() முடிந்தால் பிரெஞ்சில் இதைச் சொல்லிப் பாருங்கள்!!13 May, 2022, Fri 13:36 | views: 41952
![]() உலகில் எங்கெல்லாம் பிரெஞ்சு மொழி பயன்படுகின்றது?9 May, 2022, Mon 13:58 | views: 41321
![]() ஃபிரான்சின் குப்பைத் தொட்டி Poubelle மனிதன்!30 April, 2022, Sat 18:57 | views: 53651
![]() நாட்டை விட்டு சென்றாலும் பின் தொடரும் கடிதம்! - தபாலக வசதிகள்!12 January, 2022, Wed 11:41 | views: 48719
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |